Sorry, you need to enable JavaScript to visit this website.

போளுவாம்பட்டி

போளுவாம்பட்டி கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ஊராகும். காஞ்பி ஆறாகிய நொய்யல் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது. போளுவாம்பட்டியிலிருந்து ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள கோட்டைக்காடு என்ற மேட்டுப் பகுதியில் அகழாய்வு நடத்தப்பட்டது.

 

அகழாய்வில் ஐம்பது வண்ண கற்களால் ஆன பெரிய மற்றும் சிறிய மணிகளும் சுடுமண் காதணிகளும், கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், சுடுமண் கிண்ணங்கள், மூடிகள் மற்றும் சுடுமண் முத்திரை ஆகியன புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

 

இப்புதைகுழி உலைக்களனாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுடுமண் முத்திரையில் மூவேந்தர்களின் சின்னங்களான மீன், உட்கார்ந்த நிலையில் புலி மற்றும் வில் அம்பு பொறிக்கப்பட்டுள்ளது. விளிம்பு பகுதியில் பொறிக்கப்ட்ட வட்டடெழுத்துகள் கி.பி. 700 நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.