Sorry, you need to enable JavaScript to visit this website.

கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம்

சென்னைத் தலைமை அலுவலகத்தில் 1973 ஆம் ஆண்டிலிருந்து கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஓராண்டு கால “கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்” முதுநிலைப் பட்டயப் பயிற்சி எட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் பயிலுதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.4,000/- வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையில்,  249 மாணவர்கள் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில் இருந்து முதுகலைப் பட்டயம் பெற்றுள்ளனர்.

அடிப்படைத் தகுதிகள் - கல்வித் தகுதி: முதுநிலைப் பட்டம் - தமிழ் / சமஸ்கிருதம் / பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் / வரலாறு.

அடிப்படை மொழி -தமிழ் மற்றும் ஆங்கிலம்

பதிவு செய்யும் முறை - ஆண்டுதோறும், ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான விளம்பரம் தமிழ் நாளிதழில் வெளியிடப்படும். ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பயிற்சிக் காலம் - 1 ஆகஸ்ட் முதல் 31 ஜூலை வரை.

பயிற்றுவிக்கப்படும் பாடங்களின் விவரம் - கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வு மற்றும் கள ஆய்வு, கலை மற்றும் கட்டடக்கலை, நாணயவியல் முதலான பாடங்கள் கற்பிக்கப்படும்.

பயிற்சி முடிவு - எழுத்துத் தேர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவரும் பழம்பெருமை வாய்ந்த கோயில் ஒன்றினைத் தெரிவு செய்து ஆய்வேடாக சமர்ப்பித்தல் வேண்டும்.

கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்