Sorry, you need to enable JavaScript to visit this website.

ஆலம்பரை

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது பண்டைய நாட்களில் இடைக்கழி நாட்டுக்குட்பட்டதாக விளங்கியிருக்கிறது.

பழங்காலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கிய மரக்காணம் இவ்வூருக்கு அருகில் உள்ளது. ஆலம்பறையில் கி.பி. 17-18 ஆம் நுhற்றாண்டில் இருந்து வந்த சமூக பண்பாட்டை அறியும் நோக்கில் இங்குள்ள கோட்டைக்குட்பட்ட பகுதியில் அகழாய்வு நடைபெற்றது.

மூன்று அகழாய்வுக்குழிகள் அமைக்கப்பட்டன. இதில் சுடுமண்ணாலான பொருட்கள், செம்பு பொருட்கள், இரும்பு, கண்ணாடி மற்றும் &டவ;யத்தினால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கருங்கல்லினால் ஆன பீரங்கி குண்டுகள், ஃபோர்சிலைன் வகை ஓடுகள், தக்கிளி, சுடுமண் விளக்குகள், புகைப்பான் மற்றும் நாணயங்கள் செய்யும் சுடுமண்ணாலான அச்சுகளும் இவ்வகழாய்வில் கிடைத்தன.

ஆலம்பரையில் கி.பி. 17-18ம் நுhற்றாண்டில் நடைபெற்ற வணிகம் குறித்த தடயங்களும், இங்கு வாழ்ந்த மக்களின் சமூக-கலாச்சார அம்சங்களையும் இவ்வகழாய்வானது வெளிப்படுத்தியது.