Sorry, you need to enable JavaScript to visit this website.

ஸ்வஸ்திக் கிணறு

வரலாற்றுச் செய்திகள்:

இவ்வூரில் “ஸ்வஸ்திகா கிணறு” என்று அழைக்கப்படும் புகழ்மிக்க வரலாற்றுச் சின்னம் உள்ளது. இவ்வூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வஸ்திகா கிணறு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கி.பி 800-ல் ஆலம்பாக்கத்து விசையநல்லூரான் தம்பி கம்பன் அரையன் என்பவனால் தோண்டி அமைக்கப்பட்டது. இக்கிணறு “மார்பிடுகு கிணறு” என்று அழைக்கப்பட்டது.

இக்கிணற்றின் சுவரில் காணப்படும் பாடல் கல்வெட்டொன்று இதே காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடல்,

  • “ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
  • பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாய்தேய்
  • தண்டார் முப்பு வயதுன்னை தளரச்செய்து நில்லா முன்
  • உண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைமினேய்”

என்று வாழ்வு என்னும் காலச்சக்கரம் நிலையானதல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. வாழ்க்கை நிலையாமையைப் பற்றிக் கூறும் அரிய கல்வெட்ட இது. நான்கு புறங்களிலிருந்து கிணற்றின் உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்ட படிகளில் பல்லவர் கால எண்கள் 1 முதல் 10 வரை இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 316 கி.மீ தொலைவில் உள்ள திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 2832/த.வ.ப.துறை/நாள்/31.12.76