Sorry, you need to enable JavaScript to visit this website.

கட்டபொம்மன் கோட்டை

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரில் வடக்கில் ஓடும் குண்டாறு என்னும் சிற்றாற்றின் வடகரையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது இக்கோட்டை. இராமநாதபுரம் சீமையை ஆட்சி செய்த திரு. உடையாத்தேவர் என்னும் வஜய ரகுநாத சேதுபதியால் (கி.பி 1711- 1725) கட்டப்பட்டது

இக்கோட்டை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியாளரின் உதவியுடன் இக்கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டை அளவில் சிறியதாக இருந்தாலும் இரண்டு வரிசைக் கற்சுவர்களுடன் கூடியது.

இராமநாதபுரம் ஜமீனுக்குரிய இக்கோட்டையை பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்கு பின் 25.08.1801-ல் கிழக்கியதியக் கம்பினி தன் வசப்படுத்திக்கொண்டது. மருது சகோதரர்களின் தலைமையில் சிவகங்கைப் படைகள் இக்கோட்டையைக் கைபற்றிச் சிலகாலம் ஆண்டனர்.

 

ஆனால் மிகவிரைவில் கம்பெனியார் மீட்டதுடன் கோட்டையையும் இடித்தனர். 09.09.1878-ல் ஜாக்சன் துரையைச் சந்திப்பதற்காக வீரபாண்டியக் கட்டபொம்மன் இராமநாதபுரம் வந்த போது ஒருநாள் இக்கோட்டையில் தங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இக்கோட்டை கட்டபொம்மன் கோட்டை என உள்ளுர் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 507 கி.மீ தொலைவில்  கமுதி உள்ளது.

வட்டம் : முதுகுளத்தூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 1659/கல்வித் துறை/நாள்/29.08.83