Sorry, you need to enable JavaScript to visit this website.

அகஸ்தீஸ்வரர் கோயில் - பெருங்குடி

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டாம் பராயதகனான சுயதரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுவதால் சுயதரசோழன் (கி.பி 968) காலத்தில் இக்கோயில் எழுப்பப்பெற்றதாகக் கருதலாம்.

இக்கோயில் தொடக்க காலக் கல்வெட்டில் பெருமுடி பரமேஸ்வரம் என்றும் திருப்பெருமுடி பரசூசுவர ஸ்ரீ கோயில் என அழைக்கப்படுகிறது. பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளில் பெருமுடி அகத்தீசுவரமுடையார் என அழைக்கப்படுகிறது.

முற்காலச் சோழர் கலைப்பாணியுடன் இக்கோயில் விளங்குகிறது. வேசர விமானத்துடன் காட்சியளிக்கிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணாரூர்த்தி, அர்த்தநாரிஸ்வரர், பிரம்மா, சண்டிகேசுவரர் போன்ற கற்சிற்பங்கள் உள்ளன.

 

இக்கோயிலின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டில் ஆதித்தன் ரூன்றாவது ஆட்சியாண்டில் “வீரபாண்டியனின் தலைகொண்ட பரகேசரிவர்மன்” என்றும் வரலாற்றுக் குறிப்பு காணப்படுகின்றது. முதலாம் இராஜராஜனின் முதல் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. மேலும் பிரம்மா,ளூ, தட்சிணாரூர்த்தி, அர்த்தநாரிஸ்வரர், சண்டிகேசுவரர் போன்ற கற்சிற்பங்கள் முற்காலச் சோழர்களின் கலைப்பாணியை எடுத்துக் காட்டுகின்றது. இக்கோயிலும் சிற்பங்களும் சுயதரசோழன் கால கட்டட-சிற்பக்கலைக்கு சிறயத சான்றாக திகழ்கிறது.

அமைவிடம் : சென்னையிலிருயது 316 கி.மீ தொலைவில் உள்ள கி.மீ திருச்சி - திருபைசீவி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும் சிற்றூரில் திருச்சியில் இருயது சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 269/த.வ.ப.துறை/நாள்/20.12.94