Sorry, you need to enable JavaScript to visit this website.

தடாகபுரிஸ்வரர் கோயில் - மடம்

வரலாற்றுச் செய்திகள்

இப்பகுதியை ஆண்ட மன்னன் தடாகம் வெட்டிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்ததாகவும் அதனை ஸ்தாபித்து வழிபட்டதால் தடாகபுரிஸ்வரர் என வழங்கப்படுவதாகவும் கூறுவர். இக்கோயில் முதலாம் குலோதுங்க சோழன் கால கற்றளியாகும்.

இக்கோயில் கருவறை, உள்மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் நூற்றுக்கால் மண்டபம் திருமண மண்டபம் பரிவார சன்னிதிகள் கோபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது/ கணபதி. முருகன.ளூ சப்தமாதர். பைரவர். சண்டிகேஸ்வரர் ஆகிய பரிவார சன்னதிகள் உள்ளன. உட்பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறாள்.

சோழர் காலம் தொடங்கி பல்வேறு அரச மரபினரின் 57 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. ஏறக்குறைய 18 கல்வெட்டுகள் சோழர் காலத்திலும் . 14 கல்வெட்டுகள் விஜய நகர அரசர் காலத்திலும் வெட்டப்பட்டுள்ளன/ சம்புவராயர். பாண்டிய மன்னர்களால் தலா நான்கு கல்வெட்டுகளும்.

மன்னர் பெயரின்றி பிற கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. கோயிலில் முதல் குலோத்துங்கன் காலக் கல்வெட்டே தொன்மையானது என்பதால் இவன் காலத்தில் கோயில் கட்டப்பபட்டது எனலாம். எனினும் கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்கீரைக் குளத்தூர் என்றும் இங்கிருந்து வாணியன் சயவல்லவன் என்பவன் ஊர்ச்சபையிடம் நிலம் விலைக்கு வாங்கி ஏரிளூளூப்பட்டியாக வழங்கியுள்ளதையும் கூறுகிறது.

கோயிலில் விளக்கு வைத்த பல்வேறு நாட்டவர் நிலமும். பொன்னும் வழங்கியதுடன் பசுக்களையும் அளித்துள்ளனர். கோயிலின் ஙு விளக்கு ஙூ விளக்கு ¾ விளக்கு ஒரு விளக்கு வைக்க பலர் தானம் புரிந்துள்ளார்கள். கோயிலுக்குச் சந்தனம் வழங்க அத்திமல்லன் ஏற்பாடு செய்துள்ளான். சிறுபுகழூற் உத்தமசம்பிருஞ்சிளூற்றுத் தனையன் என்பவன் சப்த மாதர்களை ஏற்படுத்தி வழிபாட்டிற்குத் தானம் தந்துள்ளான். காலம் கி.பி 1383. கம்பன் உடையார் கல்வெட்டு திருமுதுகுன்றத்தைச் சேர்ந்த அடியார் திருக்கையொட்டி பாடியதைக் கூறுகிறது. வேட்டையின் போது தவறுதலாக ஒருவனைப் புவனாச் சோழன் கொன்று விட. பாவம் நீங்க கோயிலில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்துள்ளான். வேறு சில கல்வெட்டுகளும் தவறுதலாகக் கொன்றதைக் கூறும் சில தமிழ்ப்பாடல்களும் கல்வெட்டுகளில் உள்ளன. முன்றாம் இராச நாராயணன் கல்வெட்டுகள் புவனேகு பாகுதேவர் அழகிய சிற்றம்பலவர்.

சிற்றம்பலவர் மகன் புவனேகு பாகுதேவர் என்ற மடத்தின் தலைவர்களை குறிப்பிடுகின்றன. கண்டர் உளிமாராய நாயக்கன் சகம் 1285 இல் வெளிளூக்கோபுரம் ஏற்படுத்தியுள்ளார். தடாகபுரிஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத்தில் உள்ள முன்றாம் இராசநாராயணன் காலக் கல்வெட்டு கிபி 1368 இல் சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது

அமைவிடம் : சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும்வழியில் 20 கி.மீ தொலைவில் உள்ள ஏந்தல் கூட்டு ரோடில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : வந்தவாசி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 46/த.வ.ப.துறை (ம) அறநிலையத் துறை/ -நாள்/14.07.83