Sorry, you need to enable JavaScript to visit this website.

தேரிருவேலி

தேரிருவேலி, இராமநாதபுரம் முதுகுளத்தூர் வட்டத்தில் முதுகுளத்தூருக்குக் கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திற்கு மேற்கே 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 

அகழாய்வில் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சாம்பல் வண்ணப் பானை ஓடுகள், ரோமானிய ரௌலட்டடு பானை ஓடுகள், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் ஆகியவை கணிசமான அளவில் சேகரிக்கப்பட்டன.

 

குறியீடு கொண்ட பானை ஓடுகள் 50, மௌரியப் பானை ஓடுகள் (வடநாட்டு கருப்பு பூச்சுப் பானை ஓடுகள்) மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் 6, அகழாய்வுகக் குழியிலிருந்து சேகரிக்கப்பட்டது. குறியீடு கொண்ட பானை ஓடுகளில் இரண்டில் மீன் உருவம் கீறப்பட்டுள்ளது.

 

 தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில், கொற்றன், சாத்தன் மற்றும் நெடுங்கிள்(ளி) போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சங்க காலத்தைச் சார்ந்த சில்லுகள், கெண்டியின் மூக்குப் பகுதிகள், சுடுமண் தாங்கிகள், இரும்புப் பொருட்கள், சுடுமண் விளக்குகள், சங்கு வளையல் துண்டுகள், அறுக்கப்பட்ட சங்குள், தோசைக்கல் மற்றும் கார்னிலியன் மணிகள் இவ்வகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.