Sorry, you need to enable JavaScript to visit this website.

பாறைஓவியங்கள் - கீழ்வாலை

வரலாற்றுச் செய்திகள்

கீழ்வாலை என்ற ஊருக்கும் மேல்வாலைக்கும் இடையில் இரத்தப் பாறை என வழங்கப்படும் சிறிய 3 குன்றுகளில் 4இடங்களில் பெரங்கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. வட இயதியா மற்றும் மேலை நாட்டு குகை ஓவியங்களுடன் ஒப்பிட்டுக் காணக்கூடிள சிறப்புகளை இவ்வோவியங்கள் கொண்டுள்ளன.

கீழ்வாலையில் காணப்படுளூம் ஓவியங்களில் முதல் பிரிவில் மனிதன் ஒருவன் குதிரை மீது அமர்யதிருக்கிறான். மற்றொரு உருவம் அக்குதிரையின் கடிவாளக் கயிற்றைப் பிடித்திருக்கிறது. ரூன்றாமவன் கைகளைப் பக்கவாட்டில் விரித்து அவர்களை வரவேற்பது போன்று நிற்கிறான். இம்ரூன்று நபர்களுக்கும் பறவையின் அலகு போன்று முகம் அமையதுள்ளது.

குதிரை மீது அமர்யதிருப்பவனின் இடையிலும், சேனத்தைப் பிடித்திருப்பவன் இடையிலும் குறுவாள் காணப்படுகிறது.

இரண்டாம் பிரிவில் நான்கு ஆடவர் ஒருவரோடொருவர் கை கோர்த்தவண்ணம் ஒரு படகின் மீது நிற்பது போன்றுள்ளனர். ஒருவன் கையில் நீண்ட கமிளூபு இருப்பதால் படகைச் செலுத்துபவனாக அவனைக் கருதலாம். இவர்களுக்கும் பறவையின் முகமே காட்டப்பட்டுள்ளன. ரூன்றாம் பிரிவில், சியதுசமவெளியில் காணப்படும் சில குறியீடுகள் போன்று வரையப்பட்டுள்ளது. நான்காவது பிரிவில் ஆறு மனிதர்கள் வரிசையாக நிற்கின்றனர்.

இது நடன நிகழ்ச்சியாகவோ, மயதிரச் சடங்காகவோ இருக்கலாம். இங்குள்ள ஓவியங்களைக் கீழ்க்கண்டவாறு பிரித்து ஆய்வு செய்யலாம். வுயீலங்கினம், விலங்கின அலகு கொண்ட மனிதன், கதிரவன், ஆயுதம, நடனநிகழ்ச்சி, குறியீடுகள், குதிரை உருவம் மட்டுமே இங்குள்ளது. இங்கிருப்பது போன்று கிருஷ்ணகிரி மற்றும் கோவை வேட்டைக்காரன் மலையிலும் நடன நிகழ்ச்சி காணப்படுகின்றன.

கீழ்வாலையில் வரிசையாக காணப்படும் ஐயது சின்னங்களில் முதல் சின்னம் கூரை போன்றும், இரண்டாவது மத்தளம் போன்றும், ரூன்றாவது சீப்பு வடிவிலும், நான்காவது மத்தள வடிவிலும், ஐயதாவது வட்டத்தினுள் குறுக்குக் கோடுகளும் இருப்பதால் பிற்கால ஹராப்பா எழுத்துக்களுடன் அறிஞர்கள் ஒப்பிட்டுள்ளனர். ஓவியமருகே கொல்லையில் கருப்பு சிவப்பு பாணை ஓடுகள் கிடைக்கின்றன. கி.மு 1,000 லருயது 500க்குள் இவற்றைக் கணிக்கலாம்.

அமைவிடம் : சென்னையிலிருயது 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருயது --- கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திருக்கோவிலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 66/த.வ.ப.துறை/நாள்/13.03.87