Sorry, you need to enable JavaScript to visit this website.

TANFINET - முகப்புரை

           மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற விதி 110-ன் கீழ், பாரத்நெட் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும், மற்றும் அதற்காக "தமிழ்நாடு பைபர்நெட்" (TANFINET) என்ற பெயரில், சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்படி நிறுவனம் துவங்குவதற்கும், பாரத்நெட் திட்டத்தினை செயல்படுத்தவும் ரூ.50 இலட்சம் பங்கு முதலீட்டாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கண்ணாடி இழை வலைபின்னல் மூலம் 1 Gbps அளவிலான மேம்படக்கூடிய அலைவரிசை வழங்கப்படும்.

மத்திய அரசின் தலையாய திட்டங்களில் ஒன்றான பாரத்நெட் திட்டம் மூலம், Universal Service Obligation Fund, தொலைதொடர்பு துறை மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் நிதியுதவியடன் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இணைய இணைப்பு வழங்கபட உள்ளது. இத்திட்டம் வட்டாரம் முதல் கிராம பஞ்சாயத்துகள் வரை கண்ணாடி இழை வலையமைப்பு மூலம் இணைய இணைப்பு வழங்கவும், மாநிலம் முழுவதும் இ-சேவை மற்றும் மின்னனு பயன்பாடுகளை வழங்க அரசுக்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் கையாளப்பட்டு வந்த பாரத்நெட் திட்டம் தற்போது புதியதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.


Top