Sorry, you need to enable JavaScript to visit this website.

பாரத்நெட் திட்டம்

        மத்திய அரசின் திட்டமான பாரத்நெட் திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை வலையமைப்பு மூலம் மேம்பட்ட அலைவரிசையில் இணைக்க உதவுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், கடந்த 14-09-2015 அன்று, மத்திய அரசின் பாரத்நெட் திட்டம் தமிழகத்தில் மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் அதற்கென “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்” (Tamil Nadu FibreNet Corporation Limited) என்கிற சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். இந்நிறுவனம் அமைக்க அரசு உரிய ஆணைகள் பிறப்பித்ததையடுத்து, நிறுவன விதி, 2013 (Companies Act, 2013)-ன்படி 08-06-2018 அன்று TANFINET கார்ப்பரேஷன் நிறுவப்பட்டது.

          இத்திட்டத்தினை Linear Architecture முறையில், GPON தொழில்நுட்பத்தில், ரூ.1230.90 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பின்னர், மேற்படி Architecture தற்கால தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வரைவு திட்டம் Revised Linear Architecture-க்கு மத்திய அரசின் ஒப்புதல் அளித்துள்ளது.

        பாரத்நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 Gbps அலைக்கற்றை (தேவைக்கேற்ப மாற்றத்தக்க வகையில்) வழங்கப்படும்.

தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டம் (பாரத்நெட் கட்டம்-II ) செயல்படுத்தல் மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல்கள்:

இங்கே தொடுக்கவும்  (பாரத்நெட் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் முக்கிய உண்மைகள்)

 


Top