கலைபண்பாட்டு இயக்ககம்
- தமிழ்வளச்ச்சி வளாகம்,9, தமிழ்சாலை, எழும்பூர்,சென்னை-600008 ,
- தொலைபேசி : 044-28193195, 044 - 28192748
- மின் அஞ்சல்: artandculture@tn.nic.in
கலைபண்பாட்டுத் துறைஆணையர் அவர்களின் தலைமையில் இணைஇயக்குநர், உதவிஇயக்குநர், கணக்குஅலுவலர்,செயல்அலுவலர் மற்றும் இதரஅலுவலர்கள் ஆணையருக்குஉதவியாக அரசின் பல்வேறுகலைப்பணித் திட்டங்களை ஒருங்கிணைத்துசெயல்படுத்திடும் பொருட்டு, இத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
துறையின் நோக்கம்
- தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களான கலை, இசை, நடனம், நாடகம்.ஓவியம், சிற்பம், கட்டடவியல், நாட்டுப்புறக்கலைகளை வளர்ப்பது.
- பொதுமக்களிடையே இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட கலை வடிவங்களை கொண்டு சேர்த்தல்.
- கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஆதரித்து அதன் வாயிலாக, அவர்களின் கலைப் படைப்புகளை போற்றிப் பேணிப் பாதுகாத்து, எதிர்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லுதல்.
துறையின் செயல்பாடுகள்
- இளைய தலைமுறையினருக்கு இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக் கலைகள்,ஓவியம் மற்றும் சிற்பம் முதலான கலைகளை நிகழ்த்துக்கலைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கவின்கலைக் கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிற்றுவித்தல்.
- கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களை ஊக்குவிக்கும் வண்ணம் துறையின் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் வழங்குதல்.
- தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை வளர்த்தல், நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு கலைப்பயிற்சி அளித்தல்.
- திறமைமிக்க கலைஞர்களுக்கு மாநில அளவிலான விருதுகளும் அகவைக்கு ஏற்றவாறு மாவட்ட விருதுகளும் வழங்குதல்.
- தமிழகத்தின் பண்பாட்டு கலைகளை தமிழகத்திலும்;வெளிமாநிலங்களிலும் , அயல் நாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் துறையால் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
- நலிவுற்ற நிலையில் வாழும் வயோதிகக் கலைஞர்களுக்கு திங்கள்தோறும் நிதியுதவி வழங்குதல்.
- கலை விழாக்கள் நடத்திட தன்னார்வக் கலை அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்.
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அமைப்புகள்
- மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள் (7) ( காஞ்சிபுரம், சேலம் , தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர்).
- தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகம்.
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் (4) (சென்னை, திருவையாறு, மதுரை மற்றும் கோயம்புத்தூர்).
- அரசு கவின் கலைக் கல்லூரிகள் (2) (சென்னை, கும்பகோணம்).
- அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, மகாபலிபுரம்.
- மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் ( 17) .
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.
- ஓவிய நுண்கலைக்குழு.
- ஜவகர் சிறுவர் மன்றங்கள் (40).(தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர்)
- நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியம்.
- மாவட்டக் கலை மன்றங்கள் (32) (தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர்).
- கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ,திருச்சிராப்பள்ளி ( அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ).