புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் தேசிய பாலஸ்ரீ விருதிற்கான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியானது மேடைக்கலை, படைப்புக்கலை அறிவியல்கலை, எழுத்துக்கலை ஆகிய ஆகிய நான்கு வகையான முதன்மைக் கலைகளை உள்ளடக்கிய 16 வகை கலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
புதுதில்லி தேசிய சிறுவர் மன்றம் 1995 ஆம் ஆண்டு முதல் தேசிய பாலஸ்ரீ விருது திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. தேசிய பாலஸ்ரீ விருது என்ற கௌரவம் தேசிய சிறுவர் மன்றத்தின் ஊக்கமிகுந்த ஒரு முயற்சி. நான்கு முதன்மையான பாடத் தலைப்புகளில் &டவ;டுபாடு கொண்ட சிறார்களின் படைப்புத் திறனை அடையாளம் காணவும், அவர்களின் படைப்பு திறமை மேம்படுத்தவும், தேர்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு சிக்கலான செயல்முறை அடிப்படையில் படைப்பாற்றல் உள்ள சிறார்களை நாட்டிற்கு அடையாளம் காட்டவும், ஒரு ஆக்கபூர்வமான நடைமுறை மட்டுமே நியாயமான தேர்வை உறுதிப்படுத்த இயலும் என்பதை மனதில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு இத்திட்டத்தில் சில மாற்றங்களை உள்ளடக்கி, சிறார்களின் படைப்புத் திறமை மேம்படுத்திடும் வகையில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வ.எண் | பிரதான தலைப்புகள் | உப தலைப்புகள் |
---|---|---|
I | மேடைக்கலையில் படைப்பாற்றல் | குரலிசை நடனம் தாள இசை / கருவியிசை நாடகக் கலை மற்றும் பொம்மலாட்டம் |
II | படைப்புக் கலை | ஒவியம் b. சிற்பம் c. கைவினை d. விஸ்வல் ஆர்ட்ஸ் ( கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட்) |
III | எழுத்துக்கலையில் படைப்பாற்றல் | கவிதை b. கதை c. கட்டுரை d. உரையாடல்கள் மற்றும் நாடகம் |
IV | அறிவியல் கலையில் படைப்பாற்றல் | அறிவியல் மாடல் உருவாக்கம் அறிவியல் திட்ட கண்டுபிடிப்பு அறிவியல் புதிர்களுக்கு தீர்வு காணுதல் அறிவியல் கண்டுபிடிப்பு |
மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று மூன்று நிலைகளில் பாலஸ்ரீ விருது தேர்வுகள், தேசிய சிறுவர் மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அடையாளம் காணப்பாட்ட மாநில அமையங்கள் வாயிலாக மாநில அளவிலான தேர்வுகள் ஒருங்கிணைக்கப்படும். தேசிய அளவிலான தேர்வுகள் தேசிய சிறுவர் மன்றத்தால், புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தில் நடத்தப்படும். போட்டி நடைபெறும் நாள், விவரம் தொடர்புடைய மாநில மையங்களின் வாயிலாக சிறார்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேடைக்கலை படைப்பாற்றல் | எழுத்துக்கலை படைப்பாற்றல் | ||||
---|---|---|---|---|---|
வ. எண் | விவரம் | மதிப்பெண் (100) | வ. எண் | விவரம் | மதிப்பெண் (100) |
1 | திறன் | 20 | 1 | மொழித்திறனை சரளமாக கையாளுதல் | 20 |
2 | உணர்வின் வெளிப்பாடு / தடுப்புகள் | 20 | 2 | உணர்வின் வெளிப்பாடு / தடுப்புகள் | 20 |
3 | அசல்தன்மை மற்றும் வழங்கப்படும் மைப்பொருளில் செயல்திறன் | 40 | 3 | மைப்பொருளில் செயல்திறன் | 20 |
4 | ஒட்டுமொத்த மதிப்பீடு | 20 | 4 | அசல்தன்மை மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு | 40 |
படைப்பு கலை | அறிவியல் கலை படைப்பாற்றல் | ||||
---|---|---|---|---|---|
வ. எண் | விவரம் | மதிப்பெண் (100) | வ. எண் | விவரம் | மதிப்பெண் (100) |
1 | செயல்முறை | 40 | 1 | செயல்முறை | 40 |
2 | தயாரிப்பு | 40 | 2 | தயாரிப்பு | 40 |
3 | அசல் தன்மை மற்றும் வெளியீட்டின் செயல்திறன் | 20 | 3 | அசல் தன்மை மற்றும் வெளியீட்டின் செயல்திறன் | 20 |
மூன்று வகை வயது பிரிவுகளில் மொத்தம் 80 விருதுகள் வழங்கப்படுகின்றன.
(a) | 10-12 வயது பிரிவில் 20 விருதுகள் i. 10-12 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் ஒரு விருது ii. ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் ஒரு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 16 மொத்தம் = 4 |
(b) | 12-14 வயது பிரிவில் 20 விருதுகள் i. 12-14 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் ஒரு விருது ii. ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் ஒரு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 16 மொத்தம் = 4 |
(c) | 14-16 வயது பிரிவில் 40 விருதுகள் i. 12-14 வயது பிரிவில் ஒவ்வொரு உபபிரிவிலும் ஒரு விருது (ii) ஒவ்வொரு முதன்மை பிரிவிலும் இரண்டு மாற்றுதிறனாளிக்கு விருது |
மொத்தம் = 32 மொத்தம் = 18 |
வ.எண் | விருதாளர் பெயர் | பிரிவு | இடம் |
---|---|---|---|
1 | செல்வி வி.யு.எம்.ஐஸ்வர்யா | குரலிசை (மேடைக்கலை) | சென்னை |
2 | செல்வி ஆ.லலிதா அத்வைதா | நாடகக் கலை (மேடைக்கலை) | சென்னை |
3 | செல்வி எஸ்.ஹரிப்பிரியா | ஓவியம் ( படைப்புக்கலை) | சென்னை |
4 | செல்வன் பி.பார்த்திபன் (மாற்றுத்திறனாளி) | சிற்பம் ( படைப்புக்கலை) | சென்னை |
5 | செல்வன் பி.ஜெயச்சந்தர் | கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட் (படைப்புக்கலை) | சென்னை |
6 | செல்வன் ஜெ.பிரதீப்குமார் | அறிவியல் மாதிரி உருவாக்குதல் (அறிவியல் படைப்பாற்றல்) | சென்னை |
வ.எண் | விருதாளர் பெயர் | பிரிவு | இடம் |
---|---|---|---|
1 | செல்வி ஐஸ்வர்யா (மாற்றுத்திறனாளி) | நடனம் (மேடைக்கலை) | சென்னை |
2 | செல்வன் சங்கரபிரசாத் | தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) | சென்னை |
3 | செல்வன் அபிஷேக் | அறிவியல் கலை | சென்னை |
4 | செல்வன் சீனிவாசன் | கணினி வரைகலை மற்றும் டிஜிட்டல் ஆர்ட் | சென்னை |
5 | செல்வி அக்ஷயா மோகன் | கதை எழுதுதல் (எழுத்துக்கலை) | சென்னை |
6 | செல்வி நிகிதா | ஓவியம் ( படைப்புக்கலை) | சென்னை |
7 | செல்வி தர்ஷினி | நடனம் ( மேடைக்கலை) | காஞ்சிபுரம் |
8 | செல்வி ஸ்ருதி | குரலிசை ( மேடைக்கலை) | ஆற்காடு |
9 | செல்வன் சஞ்சீவி | அறிவியல் கலை | ஊட்டி |
10 | செல்வன் திருவேங்கடம் | தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) | கடலூர் |
11 | செல்வன் கிரீஸ்வர் | அறிவியல் கலை | தஞ்சாவூர் |
12 | செல்வி சம்யுக்தா | கைவினை (படைப்புக்கலை) | கரூர் |
13 | செல்வி தேவிஸ்ரீ | கைவினை (படைப்புக்கலை) | சேலம் |
14 | செல்வி மதுரிதா | அறிவியல் கலை | நாமக்கல் |
15 | செல்வன் ஸ்ரீகாந்த் | தாளவாத்ய கருவியிசை (மேடைக்கலை) | ஈரோடு |
16 | செல்வி ஜனனி | கைவினை (படைப்புக்கலை) | சேலம் |
17 | செல்வி மோனிஷா | எழுத்துக்கலை | நாகர்கோவில் |
வ.எண் | விருதாளர் பெயர் | பிரிவு | இடம் |
---|---|---|---|
1 | செல்வி பைரவி வெங்கடேசன் | நடனம் (மேடைக்கலை) | சென்னை |
2 | செல்வி அஹாரிகா பாஸ்கர் | ஓவியம் ( படைப்புக்கலை) | சென்னை |
3 | செல்வி அக்ஷயா | கதை எழுதுதல் ( எழுத்துக்கலை) | சென்னை |
4 | செல்வன் சீனிவாசன் | நடனம் ( மேடைக்கலை) | ஆற்காடு |
5 | செல்வி சௌமியாக ஹரிகரன் | நடனம் ( மேடைக்கலை) | கோயம்புத்தூர் |
6 | செல்வி பிளஸ்சி ஸ்டெஜில் | எழுத்துக்கலை | திருநெல்வேலி |
7 | செல்வன் பிரசாந்த் | ஓவியம் (படைப்புக்கலை) | திருச்சிராப்பள்ளி |