பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞரின் அல்லது அவருடைய மகன் அல்லது மகள் திருமண செலவு மேற்கொண்டமைக்காக (இருமுறை மட்டும்) ரூ.5,000/- நிதியுதவி வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், உறுப்பினர் அடையாள அட்டை நகல், திருமண பத்திரிகை, திருமணத்தில் எடுக்கப்பட்ட மணமக்கள் புகைப்படம் மற்றும் வேறெந்த திட்டத்திலும் நிதியுதவி பெறவில்லை என்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் / வார்டு உறுப்பினர் சான்று ஆகியவை இணைத்து அளிக்க வேண்டும்.
பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞருக்கு மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கு அதன் விலையில் ரூ.1,500/-க்கு மிகாமல் (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை) நிதியுதவி வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், உறுப்பினர் அடையாள அட்டை நகல், கண்ணாடி வாங்கியமைக்கான இரசீது அசல் மற்றும் கண் மருத்துவரின் பரிசோதனை சீட்டு நகல் ஆகியவை இணைத்து அளிக்க வேண்டும்.
பதிவுபெற்று உரிய நாட்களுக்குள் புதுப்பித்தல் மேற்கொண்டுள்ள உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால், அவரால் நேமகம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு குடும்ப நிதி உதவியாக ரூ.20,000/- மற்றும் ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகையாக ரூ.5,000/- ஆக மொத்தம் ரூ.25,000/- வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், உறுப்பினர் அடையாள அட்டை அசல், உறுப்பினர் இறப்பு சான்று, வாரிசுதாரர் சான்று ஆகியவை இணைத்து அளிக்க வேண்டும்.
பதிவுபெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் இரண்டு வாரிசுகளுக்கு 10வது முதல் பயிலும் அனைத்து வகுப்பு மற்றும் தொழிற்கல்விகளுக்கும் தங்கும் விடுதி உட்பட, பயிலும் வகுப்புக்கேற்றவாறு கல்வி நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், அடையாள அட்டை நகல், கல்வி நிறுவனத்தில் பயில்வதற்கான சான்றிதழ் (க்ஷடியேகனைந ஊநசவகைiஉயவந) தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (ஆயசம ளுhநநவ) ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பிறக்கும் முதல் இரு குழந்தைகளுக்கு மருத்துவமனை செலவுக்காக மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ. 6,000/- நிதி உதவியாக வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், அடையாள அடடை நகல், மருத்துவமனைச் சான்றிதழ் (சேர்த்தல் மற்றும் விடுவித்தல்) (ஹனஅளைளiடிn யனே னுளைஉhயசபந), குழந்தை பிறப்பு சான்றிதழ் (க்ஷசைவா ஊநசவகைiஉயவந) ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவுபெற்ற பெண் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கருக்கலைப்பு / கருச்சிதைவு ஏற்பட்டால் மருத்துவமனை செலவுகளுக்காக ரூ. 3,000/- (இருமுறை மட்டும்) வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், அடையாள அட்டை நகல், கருக்கலைப்பு / கருச்சிதைவு செய்தமைக்கான மருத்துவமனைச் சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவுபெற்று உரிய நாட்களுக்குள் புதுப்பித்தல் மேற்கொண்டுள்ள உறுப்பினருக்கு விபத்து மரணம் ஏற்பட்டால், அவரால் நேமகம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ.1,00,000/- வழங்கப்படும். இவ்வுதவி பெற இதற்கான விண்ணப்பம், அடையாள அட்டை அசல், விபத்து மரணம் ஏற்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்று ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.