செய்திகள் :
கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறன்படைத்த ஐந்து கலைஞர்களுக்கு அவர்களது அகவைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் 9 நபர் கொண்ட கலை விருதாளர் தெரிவுக்குழு அமைத்திட அரசு ஆணையிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பாக செய்திக்குறிப்பு நாளிதழ்களில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விருதாளர் தெரிவுக்கூட்டம் நடத்தப்பட்டு தகுதியுடைய விருதாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
வ. எண் | வயது பிரிவு | விருது | விருதுத் தொகை |
---|---|---|---|
1 | 18 அகவை மற்றும் அதற்குட்பட்ட அகவைப் பிரிவினர் | கலை இளமணி | ரூ.4,000/- |
2 | 19 முதல் 35 வரை உள்ள அகவைப் பிரிவினர் | கலை வளர்மணி | ரூ.6,000/-- |
3 | 36 முதல் 50 வரை உள்ள அகவைப்பிரிவினர் | கலைச்சுடர்மணி | ரூ.10,000/- |
3 | 36 முதல் 50 வரை உள்ள அகவைப்பிரிவினர் | கலைச்சுடர்மணி | ரூ.10,000/- |
4 | 51 முதல் 60 வரை உள்ள அகவைப்பிரிவினர் | கலை நன்மணி | ரூ.15,000/- |
5 | 61 அகவை மற்றும் அதற்கு மேற்பட்ட அகவைப் பிரிவினர் | கலை நன்மணி | ரூ.20,000/ |
மொத்தம் | ரூ.55,000/- |