செய்திகள் :
இந்திய மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காகவும், தொன்மையும், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளைபோற்றிப் பாதுகாக்கவும், தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பெற்றது.தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் கலைத் திட்டப்பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகின்றது.