இசை, கவின் கலை மற்றும் நிகழ்த்துக் கலையின் அனைத்துப் பிரிவுகளிலும் கல்விப் பயிற்சி வழங்குதல், இசை, கவின்கலை மற்றும் நிகழ்த்துக் கலையில் ஆராய்ச்சிக்கான வழிவகைகள், கல்வி மேம்பாடு மற்றும் அத்துறை தொடர்பான அறிவுசார் பரப்புரை செய்வதற்கும், பாரம்பரிய இந்திய இசை, நிகழ்த்துக்கலை மற்றும் கவின் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் 2013 ஆம் ஆண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேந்தராகக் கொண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மற்றும் திருச்சிராப்பள்ளியில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் இணைவுடன் செயல்படுகிறது. மேலும் தமிழிசை கல்லூரி, இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை மற்றும் சத்குரு சங்கீத வித்யாலயம், மதுரை ஆகிய கல்லூரிகளும் இப்பல்கலைக் கழகத்தின் இணைவுடன் செயல்படுகின்றன. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக, சென்னை அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
மூன்றாண்டு முதுகவின் கலைப் பட்டப் படிப்புகள் (வார இறுதி நாட்கள் பயிற்சி)
ஓவியம் மற்றும் காட்சி வழி தொடர்புத்துறை