தொன்மையான தமிழகக் கலைகள் குறித்த தாக்கத்தை கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களிடையே ஏற்படுத்திடவும் கலைப்பணிகளை ஒருங்கிணைத்து மாவட்டங்களில் செயல்படுத்தவும் கீழ்காணும் ஏழு இடங்களில் மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
உதவி இயக்குநர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மண்டல கலை பண்பாட்டு மையங்கள் வாயிலாக மாவட்டங்களில் கலை விழாக்கள், கலைப்போட்டிகள், கலைப்பயிற்சிகள்,ஓவிய/சிற்பக் கண்காட்சி நடத்துதல், கலைஞர்களுக்கு அடையாள அட்டை, மாவட்ட அளவிலான விருதுகள் வழங்குதல். மாவட்ட அரசு இசைப்பள்ளிகள், ஜவகர் சிறுவர் மன்றங்கள் ஆகியவற்றை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்தல் , நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மண்டல அளவிலான நிர்வாகம் மற்றும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வ.எண் | மண்டலம் | மாவட்டங்கள் | முகவரி தொடர்பு எண் |
---|---|---|---|
1 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை, திருவண்ணாமலை,வேலூர் | மண்டலக் கலை பண்பாட்டு மையம் சதாவரம், கோட்டை காவல் (கிராமம்),ஓரிக்கை (அஞ்சல்),சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631 503. தொலைபேசி : 044 - 27269148. மின் அஞ்சல் : adartskpm@gmail.com |
2 | சேலம் | சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,நாமக்க | மண்டலக் கலை பண்பாட்டு மையம்,தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை,அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்), சேலம் - 636 302. தொலைபேசி : 0427 - 2386197, மின் அஞ்சல் : adarts.tnslm@gmail.com. |
3 | தஞ்சாவூர் | தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டிணம், திருவாரூர் | மண்டலக் கலை பண்பாட்டு மையம்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருங்காட்சியக வளாகம், தஞ்சாவூர் - 613 007, தொலைபேசி : 04362 - 232252, மின் அஞ்சல்: radactnj11@gmail.com |
4 | திருச்சிராபள்ளி | திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை | மண்டலக் கலை பண்பாட்டு மையம் எண் 32, நைட்சாயில் டெப்போ சாலை, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620 006. தொலைபேசி :0431 - 2434122, மின் அஞ்சல் : artandculturetryrgn2014@gmail.com |
5 | மதுரை | மதுரை, திண்டுகல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் | மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை - 625 002, தொலைபேசி : 0452 - 2566420, மின் அஞ்சல் : artadmdu@gmail.com |
6 | திருநெல்வேலி | திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, விருதுநகர் | மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில், திருநெல்வேலி - 627 007. தொலைபேசி : 0462 - 2553890, மின் அஞ்சல் : racctnu@gmail.com |
7 | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகி | மண்டலக் கலை பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு இசைக்ல்லூரி வளாகம், செட்டிபாளையம் பிரிவு ரோடு, மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் - 640 150, தொலைபேசி : 0422 - 2320390, மின் அஞ்சல் : adarts.tncbe@gmail.com. |
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்டங்களில் தனித்தும், அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தும், தமிழ்நாடு, இயல் இசை நாடக மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம், சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள்;ஆகியவற்றுடன் இணைந்தும் கீழ்காணும் கலை விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது.