வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | கோடை விழா, ஏற்காடு-சேலம் |
2 | மாங்கனி விழா, கிருஷ்ணகிரி |
3 | ஆடிப்பெருக்கு விழா, ஓகனேக்கல்-தருமபுரி |
4 | வல்வில் ஓரி விழா, கொல்லிமலை-நாமக்கல் |
வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | சித்திரை திருவிழா-மதுரை |
2 | கோடை விழா, கொடைக்கானல்-திண்டுகல் |
3 | கோடைவிழா ,மேகமலை-தேனி |
4 | அருவி திருவிழா, சுருளி-தேனி |
5 | ஆடித்திருவிழா-சிவகங்கை |
வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | வைகுண்ட ஏகாதசி விழா-திருச்சிராப்பள்ளி |
2 | நந்திகேஸ்வரர் திருகல்யாண விழா, திருமழப்பாடி-அரியலூர் |
3 | மகா சிவராத்திரி விழா, திருநெடுங்குடி-புதுக்கோட்டை |
வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | அருள்மிகு தியாகராஜர் ஆழித்தேர்விழா- திருவாரூர் |
2 | திருவருட்பா இசை விழா, வடலூர்-கடலூர் |
3 | வெள்ளி கடற்கரை( நெய்தல்) விழா-கடலூர் |
4 | தமிழிசை மூவர் விழா,சீர்காழி-நாகப்பட்டிணம் |
5 | கோடை விழா, கல்வராயன் மலை-விழுப்புரம் |
வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | சாரல் விழா, குற்றாலம்-திருநெல்வேலி |
2 | அருவி திருவிழா,திற்பரப்பு-கன்யாகுமரி |
3 | குமரி விழா, கன்யாகுமரி |
4 | பாவை விழா, ஸ்ரீவில்லிபுத்தூர்-விருதுநகர் |
5 | மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா, எட்டயபுரம்-தூத்துக்குடி |
வ.எண் | கலை விழா விவரம் |
---|---|
1 | கோடை விழா, வால்பாறை-கோயம்புத்தூர் |
2 | கோடை விழா, உதகை-நீலகிரி |
3 | தேயிலை விழா, உதகை-நீலகிரி |
4 | தீரன் சின்னமலை விழா, ஓடா நிலை-ஈரோடுயார் பிறந்த நாள் விழா, எட்டயபுரம்-தூத்துக்குடி |
உலக நாட்டிய தினத்தை முன்னிட்டு மண்டல கலை பண்பாட்டு மையங¦கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக செவ்வியல் மற்றும் கிராமிய நடனங்கள் சார்ந்த பயிற்சி பட்டறைகள், கருத்தரங்கள் , நடன நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்படும்.
உலக இசை தினம் (World Music Day) ஜீன் 21 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நான்கு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் வாயிலாக இசை நிகழ்ச்சிகள், இசை வினாடி வினா, இசை பட்டிமன்றம், இசைக்கருத்தரங்கம், இசை செயல்முறை பயிலரங்கம் மற்றும் இசைப்போட்டிகள் நடத்தப்படும். யுனஸ்கோ , படைப்பாற்றல் மிக்க இசை நகரமாக சென்னை மாநகரை அறிவித்ததை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பாக ஆண்டு தோறும் சென்னையில் இசை விழா நடத்தப்படும்
உலக நாடக தினம் ( World Theatre Day) மார்ச் 27 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் புராண, இதிகாச, தமிழ் காப்பியங்கள் ,இலக்கியம், வரலாறு, சமுக, நாட்டுப்புற , மௌன மற்றும் இசை நாடகங்களை மேடையேற்றம் செய்திட ஆண்டுதோறும் நடத்தப்படும்.
உலக ஓவியத்தினம் (World Art Day) ஏப்ரல் 15 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும நோக்கத்திலும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக ஓவியப் பயிற்சி முகாம்கள் மற்றும் ஓவியக் கலைக்காட்சிகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் சிறார்களிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, ஓவியம், பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய கலைப் பிரிவுகளில் 5-8, 9-12, 13-16 வயது பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது , 9-12, 13-16 வயது பிரிவுகளில் முதலிடம் பெற்ற சிறார்களுக்கிடையிலான மாநிலக் கலைப் போட்டிகளுக்கள் நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ 10 ஆயிரம், ரூ 7,500 ,ரூ 5000 பரிசாக அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் குளிர்காலம் மற்றும் கோடைக்கால விடுமுறைகளில் 10 நாட்கள் மாநில அளவிலான கலைப் பயிற்சி முகாமாக நடத்தப்படுகிறது. இம்முகாமில் இம்முகாம்களில் தமிழகத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். இம்முகாமில் பரதநாட்டியம், குரலிசை, ஓவியம்,கைவினை, நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் கலைப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் காலாண்டு விடுமுறைகளில் 10 நாட்கள் மாநில அளவிலான கைவினை கலைப் பயிற்சி முகாமாக நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் தமிழகத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். ஓவியம், கைவினை, மண்ணிலான கலைப் பொருட்கள் செய்தல், துணி ஓவியம் மற்றும் பொம்மை செய்தல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.