டெபாசிட் வேலைகள் (தொழில்துறை / நிறுவனங்கள்)
- தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமிருந்து குடிநீர் திட்டங்கள் வேண்டி பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் இணையதளத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் (www.twadeodb.in)).
- அவ்வாறு, இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- இணையதளத்தில் பதிவு செய்த வின்ணப்பங்களுக்கு கீழ்கண்ட இரண்டு சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படும்.
- த.கு.வ.வாரியத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் அருகாமையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க
- தனி குடிநீர் திட்டம்/அர்பணிக்கப்பட்ட திட்டம் மூலம் குடிநீர் வழங்க.
பராமரிப்பிலுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடைமுறைகள்
1.பயனாளிகளிடமிருந்து (தொழில்/வணிகம் சார்ந்த அமைப்புகள்) புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டவுடன், விண்ணப்பம் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்கு, ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக, ஒதுக்கம் செய்யப்படும்.
2.எந்தவொரு புதிய குடிநீர் வழங்கல் இணைப்பும் நேரடியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயிலிருந்து வழங்கப்பட மாட்டாது. மாறாக அருகிலுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து மட்டுமே இணைப்பு வழங்கப்படும்.
3.புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடைமுறை த.கு.வ.வாரியத்தால் வாரிய நடவடிக்கை எண்80/நாள் 15.09.2010-ல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்முக்கிய விவரங்கள் பின்வருமாறு.
- நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சரியான குடிநீர் அளவினை லிட்டரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அந்தந்த விகிதங்களில் குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் குடிநீர் கட்டணத்தை த.கு.வ.வாரியத்தால் அவ்வப்போது திருத்தப்படும் போது அதை செலுத்தவதற்கும் ஒப்புதல்.
- த.கு.வ.வாரிய உட்கட்டமைப்பு முதல் பயனாளியின் இணைப்பு வரையிலான உட்கட்டமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு செலவு தொகையினை 100 சதவிதம் முன்பணமாக குடிநீர் இணைப்பு செயலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு பயனாளி டெபாசிட் செய்ய வேண்டும்.
- த.கு.வ.வாரிய உட்கட்டமைப்பு முதல் பயனாளியின் இணைப்பு வரையிலான உட்கட்டமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு செலவு தொகையினை சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறியாளரால் மதிப்பிடப்பட்டபடி, 100 சதவிதம் முன்பணமாக குடிநீர் இணைப்பு செயலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு பயனாளி டெபாசிட் செய்ய வேண்டும்
- ஆறு மாத குடிநீர்க் கட்டணங்கள் எச்சரிக்கை வைப்புத் தொகையாகவும் மற்றும் ஆறு மாத குடிநீர்க் கட்டணத்தை முன்கூட்டிய கட்டணங்களாகவும் குடிநீர் இணைப்பு செயலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
- வாரியத்தின் மற்ற பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுதல்.
4.தலைமைப் பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கை, தலைமை அலுவலகத்தில் பரிசீலனைக்குப் பிறகு வாரியக் கூடத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும். புதிய குடிநீர் இணைப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான அதிகாரம் வாரியத்திற்கு மட்டுமே உள்ளது.
குடிநீர் வழங்கல் இணைப்புக்கான ஒப்புதல் மற்றும் உள்கட்டமைப்பு செலவு, எச்சரிக்கை வைப்புத் தொகை மற்றும் முன்கூட்டிய குடிநீர் கட்டணம் பெறப்பட்ட பின், த.கு.வ.வாரிய கோட்டம் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.
புதிய திட்டத்தை உருவாக்குவதற்கான நடைமுறைகள்:
- திட்டஉருவாக்கத்தின் முதல் படி, தோராயமான செலவு மதிப்பீட்டுடன் முன் சாத்தியக்கூறு அறிக்கை (PFR) தயாரிப்பது (பொதுவாக, சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் தோராயமான திட்ட செலவு ஆகியவை விண்ணப்பதாரருக்கு 22 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்).
- PFR மற்றும் த,கு.வ.வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பயனாளியின் ஒப்புதல் பெறுதல்.
- பயனாளியின் ஒப்புதலின் அடிப்படையில், விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட களப் பொறியாளருக்கு அனுமதி வழங்கப்படும்.
- நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி (அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி) முன் வைப்புத் தொகை வசூலிக்கப்படும்.
- விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.
- மண்டல அளவிலான மண்டல அறிவியல் நீர் ஆதாரம் கண்டறிதல் குழு (RSSFC) மற்றும் மண்டல தொழில் நுட்பக் குழுவின் அனுமதி பெறப்படுவது.
- தலைமை அலுவலக அளவில், மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு (SLTC) அனுமதி பெறப்படுவது..
- தொழில்துறை நீர் தேவைகளுக்கு, நீர் ஆதாரத்திற்கான அனுமதி அரசாணையை, பயனாளியால் தமிழ்நாடு தொழில் துறை மூலம் பெறப்பட வேண்டும்.
- த.கு.வ. வாரியத்திற்கும் பயனாளிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- திட்ட மதிப்பீட்டு தொகையினை ஒரே தவணையில் சேகரித்தல்.
- வாரியம்/தகுதியான அதிகாரம் மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்குதல் ( நடை முறையில் உள்ள அதிகாரப் பிரதிநிதித்துவம், அட்டவணை-2 இல் கொடுக்கப்பட்டுள்ளது).
- தலைமைப் பொறியாளர் / கண்காணிப்புப் பொறியாளர் / நிர்வாகப் பொறியாளர் ஆகியோரின் மூலம் தொழில்நுட்ப அனுமதி வழங்குதல்.
- ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தம் மூலம் பணிகளை நிறைவேற்றுதல்.
- திட்டம் செயல்படுத்தப்படும் போது, திட்ட செலவில் அதிகரிப்பு ஏதேனும் ஏற்படுமாயின் அச்செலவு தொகையினை த.கு.வ.வாரியம் தெரிவித்தவுடன், பயனாளி த.கு.வ.வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
- திட்டம் மற்றும் ஒப்பந்ததாரரின் பராமரிப்பு முடிந்ததும், திட்டம் த.கு.வ வாரியத்தால் பராமரிக்கப்படும்.
- திட்டத்தை மேலும் பராமரிக்க, த.கு.வ. வாரியம் மற்றும் பயனாளிக்கு இடையே ஒரு தனி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும் மற்றும் த.கு.வ. வாரியத்தால் உருவாக்கப்பட்ட கட்டணக் கட்டமைப்பின்படி குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அட்டவணை 1. த.கு.வ.வாரிய நடவடிக்கை எண்.20 தேதி:30.03.20232ன் படி ஆய்வுக் கட்டணங்களை வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள்
வ.எண். | வகை | ஆய்வுக் கட்டணம் | |
---|---|---|---|
முன் வைப்புத் தொகை | விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்த பிறகு இறுதியாக வசூலிக்கப்படும் தொகை | ||
1. | இந்திய அரசு/மாநில அரசு நிறுவனங்கள் | 1 MLD வரை குடிநீர் வழங்கல் தேவையினை வழங்குவதற்கு - ரூ.10.00 லட்சம். ஒவ்வொரு கூடுதல் 1 MLD அல்லது அதன் பகுதி தேவைக்கும் - ரூ.1.00 லட்சம் கூடுதலாக வசூலிக்கப்பட வேண்டும். | முன் வைப்புத் தொகை (அல்லது) விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் செலவில் 3% - இவற்றுள் அதிகமானது |
2. | தனியார் தொழிற்சாலைகள்/ கல்வி நிறுவனங்கள் | 1 MLD வரை குடிநீர் வழங்கல் தேவையினை வழங்குவதற்கு - ரூ.20.00 லட்சம். ஒவ்வொரு கூடுதல் 1 MLD அல்லது அதன் பகுதி தேவைக்கும் - ரூ.2.00 லட்சம் கூடுதலாக வசூலிக்கப்பட வேண்டும். | முன் வைப்புத் தொகை (அல்லது) விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் செலவில் 5% - இவற்றுள் அதிகமானது |
அட்டவணை-2 வைப்பு நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக, நடைமுறையில் உள்ள அதிகார பிரதிநிதிகள்,
வ.எண். | அதிகாரம் / அதிகாரி | நிர்வாக ஒப்புதல் வழங்குவதற்கான அதிகாரங்கள் |
---|---|---|
1. | நிர்வாகப் பொறியாளர் | ரூ.10.00 இலட்சம் |
2. | கண்காணிப்பு பொறியாளர் | ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.30.00 இலட்சம் வரை |
3. | தலைமைப் பொறியாளர் | ரூ.30.00 இலட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.50.00 இலட்சம் வரை |
4. | மேலாண்மை இயக்குநர் | ரூ.50.00 இலட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.1.00 கோடி வரை |
5. | வாரியம் | முழு அதிகாரம் (அரசாணை நிலை எண்.776 RD&LA நாள்.03.05.1977) |