நிலநீர் புவியியலாளர் பிரிவின் செயல்பாடுகள் :
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல்படும் நிலநீர் புவியியலாளர் பிரிவு அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து நீராதாரங்களை கண்டறியும் பணி பொறுப்புகளை மிகவும் கவனமாக நீர் கண்டறியும் முறை, நீர் வெளிக்கொணருதல், நீராதார மதிப்பீடு செய்தல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் குடிப்பதற்கு உகந்த குடிநீர் வழங்குதல் மற்றும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட நீராதாரங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை உறுதியளிக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் நீடித்த நிலைத்தன்மை கொண்ட நீராதாரங்களின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
நிபுணத்துவம் பெற்ற நிலநீர் வல்லுநர்கள் :
நிலநீர் பிரிவு – மனித வளம் :
- நிலத்தடி நீர் நிபுணத்துவம் பெற்ற நிலநீர் வல்லுநர்கள் குழு மூலம் நிலத்தடி நீர் ஆய்வு, நீர் வளம் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் உள்ள நிலநீர் வல்லுநர்கள் அறிவியல் ஆய்வு முனைவர் ஆராய்ச்சி பட்டப்படிப்பு முடித்தவர்கள் போன்ற திறமை பெற்றவர்கள் உள்ளனர்.
- நிலத்தடி நீர் நிபுணத்துவம் பெற்ற நிலநீர் வல்லுநர்களின் திறமையினை பயன்படுத்தி, நீராதாரங்களை அறிவியல் முறைப்படி கண்டறிந்து, குடிநீர் தேவைகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் திட்டங்களை உருவாக்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- நீராதாரங்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து கண்டறியும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
- நீராதாரங்களிலுள்ள நீர்தாங்கிகளின் சேமிப்பு, விசைத்திறன், கொடுதிறன், நீரோட்டம் மற்றும் நீரின் தன்மை ஆகியவற்றை அறிவியல் முறைப்படி விசைபம்பு(Pumping test) சோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
- நுண்மின்னியல் ஆய்வு மூலம் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள நீர்தாங்கிகளை வகைப்படுத்தலாம்.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீடித்த நிலைத்தன்மை கொண்ட நீராதாரங்களை பாதுகாப்பதற்கு நீராதாரம் தோற்றுவித்த இடங்களில் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து நீர் செறிவூட்டு கட்டமைப்புகளை மண்வள அமைப்பிற்கு ஏற்றவாறு தகுந்த நீர் செறிவூட்டு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகிறது.
- நீர் செறிவூட்டு கட்டமைப்புகள் நிறுவப்பட்ட இடங்களில், கட்டமைப்புகளின் தாக்கத்தினை விஞ்ஞன பூர்வமான தகவல்களை ஆய்வு செய்வதற்கு நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.
- அனைத்து நீரியல் தரவுகளின் ஆய்வுகளின் அடிப்படையில் நிலநீர் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
- மழைநீர் சேகரிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிலநீர் வல்லுநர்கள் மூலம் புதுமையான முறைகளை கண்டறிந்து, நீரியல் அமைப்புகளின்படி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பும் உருவாக்கப்படுகிறது.
- நுண்ணியல் ஆய்வின் அடிப்படையில் மண்டல மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
- நீர்நிலை பிடிப்பு அணுகுமுறை மூலம் நுண்ணிய நீர் நிலைபிடிப்புலுள்ள நீராதாரங்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
நிலநீர் புவியியலாளர் பிரிவு – செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் :
- தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள காரைப்பொட்டனார் நீர்பிடிப்பு பகுதிகளில் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த குழந்தைகளின் கல்வி நிதி(UNICEF) உதவியுடன் நீர்வள மேலாண்மை ஆய்வு செயல்படுத்தப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த குழந்தைகளின் கல்வி நிதி(UNICEF) உதவியின் கீழ் மாவட்ட நீர் வளம் பற்றிய அட்லஸ் தயார் செய்து முடிக்கப்பட்டது.
- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் நீடித்த நிலையான நீராதாரங்களை தோற்றுவித்து பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு கிராமப்புறங்களில் நெடிய மற்றும் குறுகிய பிளவு பாறைகள் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டான்சேரி நுண்ணிய நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் செறிவூட்டும் முறையான பாறைபிளவு மூலம் நீராதாரம் தோற்றுவிக்கப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திலுள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணற்றில் நீர்செறிவூட்டு கட்டமைப்புகளை நிறுவி நிலத்தடி மட்டம் உயர நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மாநில திட்டக்குழு நிதியுதவியுடன் மாநிலத்திலுள்ள 385 ஒன்றியத்தில் நீராதாரத்தை மேம்படுத்துவதற்கு தொலைதொடர்புணர்வு மற்றும் நிலபுவியியல் தகவல் முறை மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டது.
- ஈரோடு மாவட்டம், லகாம்பாளையம் கிராமத்தில் மாநில திட்டக்குழு நிதியுதவியுடன் (24x7) குடிநீர் விநியோகம் செய்வதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.
- மத்திய அரசு நிதியுதவியுடன், தாமிரபரணி ஆற்றுப்படுகையின் நீர்வளத்தினை ஆராய்ந்து, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு தேவைப்படும் நீடித்த நிலையான நீராதாரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நிலநீர் புவியியலாளர் பிரிவு – உள்கட்டமைப்புகள் :
- நிலத்தடிநீர் துல்லியமாக ஆய்வு செய்து நீரோட்டம் மற்றும் நீர்வளத்தினை கண்டறிவதற்கு அதிநவீன புவிபௌதிக உபகரணங்கள் மூலம் நிலத்தடிநீர் ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- செயலிழந்த மற்றும் குறைந்த நீரோட்டம் உள்ள ஆழ்துளைகிணறுகளை (கடினப்பாறை பகுதிகள்) புணரமைக்க, புதுப்பிக்க மற்றும் நீடித்த திறன் அதிகரிக்க வேண்டி பிளவுப்பாறை பகுதிகளில் அதிக திறன் கொண்ட நீர் செலுத்தி நீர் உட் செலுத்தும் கருவி மூலம் உட்செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நுண்மின்னியல் ஆய்வு மற்றும் விசைபம்பு சோதனை மூலம் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள நீராதாரங்களின் வகைப்பாடு மற்றும் தரத்தினை அறியலாம்.
- தொலைதொடர்பு உணர்வு தரவு தகவல்கள் – செயற்கைகோள் வரைபடங்கள், வான்வழி புகைப்படங்கள், இந்திய அரசின் பூகோள வரைபடங்கள், கருப்பொருள் வரைபடங்கள் உறுதி செய்யப்பட்ட வரைபடங்கள் ,தொடர்பு கருவிகள், கண்ணாடி இருபக்க வரைபட கருவி, பிளானி மீட்டர் மற்றும் ஒளியியல் புகைப்படங்கள்.
- மென்பொருள் – ஆர்க் நிலபுவியியல் தகவல் மற்றும் நிலத்தடி மாதிரி ஆகிய மென்பொருள் மூலம் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் திட்டங்களை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
- நீராதாரங்களின் மின்னணு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
- நீர் செறிவூட்டும் கட்டமைப்பு திட்ட ஆய்வுக்கு, நீர் செறிவூட்ட வகைப்படுத்தும் வரைபடங்கள்
- தகவல் தரவு மையத்தில் மழையளவு, நீர்மட்டம், புவிபௌதிக ஆய்வு, பிறபாறைகளின் நீர்பெருக்கம், விசைபம்பு சோதனை, ஒன்றியங்களின் தகவல் தரவுகள், நீர்பிடிப்பு பகுதி தரவுகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய செயல்பாடுகள்
நீர் ஆதாரங்களில் நீடித்த நிலை தன்மையை மேம்படுத்த குடிநீர் மற்றும் ஆதாரங்களுக்கு அருகாமையில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 12,570 நீர் செறிவூட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்ட்டுள்ளது. இதில் 8410 தடுப்பணைகள், 391 கசிவு நீர் குட்டைகள், 275 கசிவு நீர் குழிகள், 648 நீர் செறிவூட்டு படுகைகள், 101 குளங்கள் தூர் வாருதல், கரைகள் மேம்படுத்துதல் மற்றும் 757 ஊரணிகள் மேம்படுத்துதல், 177 செயல் இழந்த ஆழ்துளை கிணறுகள் புணரமைத்தல், 873 நீர் செறிவூட்டு குழி, 885 மேற்கூரையில் மழை நீர் சேகரித்தல் , (செயல் இழந்த ஆழ்துளை கிணறு வழியாக நீர் செறிவூட்டுதல், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் 53 பிளவு பட்ட பாறைகளில் நீர் உள்செலுத்தி நீர் ஆதாரங்களை அதிகப்படுத்துதல் மூலம் நீர் செறிவூட்டும் அளவு கண்காணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வாராந்திர, பருவகால மற்றும் ஆண்டு மழை பொழிவு விவரங்களை இந்திய வானிலை மையம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பருவமழைக்கு முன் மற்றும் பின், அதாவது ஜனவரி மற்றும் மே மாதத்தில் 1286 கண்காணிப்பு கிணறுகளில் நீர் மட்ட அளவுகள் அளவிடப்பட்டு அதனை தொகுத்து மற்றும் ஆய்வு செய்து நிலத்தடி நீர் குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
குடிநீர் ஆதாரங்களை அட்சரேகை, தீர்த்தரேகை புகைப்படத்துடன் எடுக்கப்பட்டு இணைய தளத்தில் பதிவிடப்படுகிறது . மேலும் குடிநீர் விநியோகம், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு பற்றியும் எடுக்கப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு. மதிப்பிடப்படுகிறது, மற்றும் விவரங்கள் பதிவிடுவதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை இந்த விவரங்கள் கைபேசி பயன்படுத்தி புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.