புவியியல் தகவல் அமைப்பு- (GIS CELL)
புவியியல் தகவல் அமைப்பு- (GIS CELL)
நிலத்தடி நீர் வரைபடங்கள் அல்லது நிலநீர் புவியியல் வரைபடங்கள் (Hydrogeomorphological Map) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு இந்திய அரசின் மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் மூலமாக (MoDWS) ரூ.198.80 லட்சத்தில் நிலத்தடி நீர் வரைபடம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னை நீங்கலாக , நில நீர் புவியியல் (HGM) Toposheet வரைபடம் 220 நிலவரைபடங்கள் வாயிலாக தேசிய தொலை உணர்வு மையம் NRSC) Hydrabad, அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை ஏற்ப தயாரிக்கப்பட்டு மற்றும் இந்திய அலுவலங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .
நீர் பகுப்பாய்வு வரைபடம் தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) Hydrabad, ஆலோசனை படி தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக தேசிய தொலை உணர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தடுப்பணை
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், வளவந்தி கொம்பை பஞ்சாயத்து, கொசவன்குட்டை கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணையின் நன்மைகள்
தலைப்பு
- கட்டமைப்பின் வகை- தடுப்பணை,
- கிராமப்பெயர் - கொசவன்குட்டை
- பஞ்சாயத்து- வளவந்தி கொம்பை,
- ஒன்றியம்- சேந்தமங்கலம்
- மாவட்டம்- நாமக்கல்.
திட்டம் - தேசிய ஊரக குடிநீர் 2009-2010 திட்டம்
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஒன்றானது அட்சரேகை 110,00,00 மற்றும் 110 36 10N மற்றும் தீர்க்கரேகை 770 40 00E மற்றும் 780 80 00E அமைந்துள்ளது. இம்மாவட்டம் காவேரி ஆற்றின் விளிம்பில் தென்மேற்கு எல்லையாக கொண்டுள்ளது. கிழக்கு பகுதியில் கொல்லிமலை அமைந்துள்ளது. ஆண்டு சராசரி மழைஅளவு 775.7 மி.மீ ஆகும்.
நிலத்தடி நீர் வளமும், நீரின் தரமும் ஆறுகளில், ஒடைகளில் துணைநதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் மேம்பட்டிருக்கிறது. இவைபேன்ற முறைகளால் மழைநீர் நீர்செறிவூட்டும் கட்டமைப்பின் மூலம் சேகரிக்கப்படுவதுடன். அதன்மூலம் நிலத்தடிநீரும் செறிவூட்டப்படுகிறது, த.கு.வ.வாரியம் ஏராளமான நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளான தடுப்பணைகளை ஒடையின் குறுக்கே மற்றும் சிற்றாற்றிலும் நீர்வழங்கும் ஆதாரங்களின் அருகில் நீரின் அளவையும், தரத்தையும் நாமக்கல் மாவட்டத்தில் மேம்படுத்தியுள்ளது.
இம்மாவட்டத்தில் நீர்செறிவூட்டும் பொருட்டு நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், தடுப்பணைகள், ஊரணிகள், மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை செறிவூட்டுவது போன்ற கட்டமைப்புகளை வெவ்வேறு திட்டங்களின் கீழ் (NRDWP. PMGY, NABARD, ARWSP, AGWRS) கட்டப்பட்டுள்ளன.
நீர் வழங்கும் ஆதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு கொசவன்குட்டை கிராமத்தில் உள்ளூர் ஒடையின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதாவது திறந்தவெளிகிணறு (பொம்மசமுத்திரம்) இந்த தடுப்பணையானது சிறந்த எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கட்டமைப்பு இடம்
மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கொசவன்குட்டை பகுதிக்கான ஒரு விரிவான ஆய்வு பாறை வகை, வானிலை தடிமன், சாய்வு, மண்வகை நீர்ப்பிடிப்பு பகுதி, ஒட்ட விவரங்கள் பற்றிய பருவநிலை காலத்திற்கான, ஆய்வின் அடிப்படையில், 15 மீ நீளமுள்ள தடுப்பணை பொம்மசமுத்திரம் கிராம திறந்தவெளி கிணறு உள்ளூர் ஒடையில் (கொல்லிமலை தோற்றுவிக்கிறது) அருகில் பரிந்துரைக்கப்பட்டது. ஒரு தடுப்பணை (நீளம் 15 மீ) பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை அமைந்திருக்கும் இடம் உள்ளூர் ஒடையில் இருக்கும் குடிநீர் வழங்கும் திறந்த வெளிகிணறு. இதனுடைய ஒட்ட நீர் திசையானது ஒடையின் கிழக்கிலிருந்து மேற்காகும்.
தடுப்பணையின் புவியியல் ஒருங்கிணைப்பான்களை அளவிடுவது (GPS Trimble Juno sb-Terra syn) is தீர்க்கரேகை 11⁰01’90”4049 N 78⁰01’81”5029 E மற்றும் உயரம் 224.76 மீ ஆகும். தடுப்பணையின் நீர்பிடிப்பு பகுதி 7.5 கிமீ ஆகும் .