ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டம்

Section: Schemes pages are not under access control

நீர் என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது, கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்துவதில், ஒன்றிய அரசு. மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உதவிவருகிறது. 2009-ஆம் ஆண்டுக்கு முன் இந்த உதவி விரைவுபடுத்தப்பட்ட ஊரக குடிநீர்த் திட்டத்தின் (ARWSP) மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு முதல் இந்த உதவி தேசிய ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டத்தின் (NRDWP) மூலம் தொடரப்பட்டது. 12-வது திட்டகாலத்தில், ஒன்றிய அரசு, வீட்டு இணைப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், கிராமப்புற குடிநீர் வழங்கு நிலையை நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு (LPCD) 40 லிட்டர் என்ற அளவிலிருந்து 55 லிட்டராக உயர்த்தியது.

பின்னர், 2019-ஆம் ஆண்டு, தேசிய ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டம் (NRDWP), ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்புகள் (FHTCs) மூலம் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ் நாட்டில், 01.03.2023 அன்றைய தேதியில் ஜல் ஜீவன் மிஷன் IMIS-ன்படி, 79,396 ஊரக குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வழங்கலில் ஊரக குடியிருப்புகளின் குடிநீர் வழங்கு நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (இந்த தரவு தற்காலிகமானது மற்றும் வருடாந்திர தரவு புதுப்பித்தலுக்குப் பிறகு மாறலாம்).

படிவம் C17 – கிராமப்புற குடியிருப்புகளின் குடிநீர் வழங்கு நிலை(01/03/2023 அன்றைய தேதியில்)

வ.எண் மாவட்டம் கிராமப்புற குடியிருப்புகள் எண்ணிக்கை குடிநீர் வழங்கு நிலை நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு லிட்டரில்
      55 40 மற்றும் <55 <40
1 அரியலூர் 710 231 221 258
2 செங்கல்பட்டு 2,158 1,722 433 3
3 கோயம்புத்தூர் 1,200 79 795 326
4 கடலூர் 2,403 1,905 399 99
5 தருமபுரி 2,835 - 890 1,945
6 திண்டுக்கல் 3,083 467 1,061 1,555
7 ஈரோடு 3,199 1,220 1,684 295
8 கள்ளக்குறிச்சி 1,201 84 1,080 37
9 காஞ்சிபுரம் 1,354 1,029 323 2
10 கன்னியாகுமரி 1,156 299 855 2
11 கரூர் 2,179 6 1,637 536
12 கிருஷ்ணகிரி 3,983 592 1,634 1,757
13 மதுரை 1,946 726 766 454
14 மயிலாடுதுறை 1,075 - 330 745
15 நாகப்பட்டினம் 980 - 42 938
16 நாமக்கல் 2,520 137 872 1,511
17 நீலகிரி 1,282 881 401 -
18 பெரம்பலூர் 314 22 186 106
19 புதுக்கோட்டை 4,062 1,302 1,480 1,280
20 இராமநாதபுரம் 2,306 37 93 2,176
21 இராணிப்பேட்டை 1,593 318 1,125 150
22 சேலம் 5,109 11 3,437 1,661
23 சிவகங்கை 2,723 52 184 2,487
24 தென்காசி 1,000 463 535 2
25 தஞ்சாவூர் 2,260 1,234 424 602
26 தேனி 607 279 202 126
27 தூத்துக்குடி 1,761 1,004 363 394
28 திருச்சி 2,210 838 675 697
29 திருநெல்வேலி 1,337 660 433 244
30 திருப்பத்தூர் 2,394 381 1,729 284
31 திருப்பூர் 2,455 414 2,009 32
32 திருவள்ளுர் 3,862 1,408 1,816 638
33 திருவண்ணாமலை 4,267 2,169 1,852 246
34 திருவாரூர் 1,704 354 1,350 -
35 வேலூர் 2,122 77 2,045 -
36 விழுப்புரம் 2,286 679 1,453 154
37 விருதுநகர் 1,760 90 1,654 16
  மொத்தம் 79,396 21,170 36,468 21,758
  விழுக்காடு   26.67 45.93 27.40