நகர்ப்புர குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள்

Section: Schemes pages are not under access control

பொது விபரம்

தமிழ்நாடு வேகமாக நகரமயமாகும் ஒரு மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகை 3.50 கோடியாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 48 விழுக்காடு ஆகும். நகரமயமாதலில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், போதுமான உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குவது போன்றவை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குடிமை தரத்தை பொறுத்து, சென்னை மாநகராட்சி தவிர, தமிழ்நாட்டின் பிற நகர்ப்புறங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வ. எண் நகர்ப்புற வகை எண்ணம்
1 மாநகராட்சிகள் 20
2 நகராட்சிகள் 138
3 பேரூராட்சிகள் 490
  மொத்தம் 648

நகர்ப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வொரு திட்டத்திலும் இந்தத் துறைக்காக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு திட்ட காலத்திலும் குறிப்பிட்த்தக்க அளவு குடிமைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தேவை அதிகரிப்பின் காரணமாக, நிலப்பரப்பு / நிலத்தடி நீரின் அதிகப்படியான உறிஞ்சல் மற்றும் தரம் தொடர்பான நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் முழுமையான நிலை அடைய இயலாத நிலைமை நிலவுகிறது.

நீர் செறிவூட்டல் கட்டமைப்புகளை (தடுப்பணைகள்) உருவாக்குவதன் மூலம் நீர்நிலைகளின் பாதுகாப்பிற்கும், நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திட்டம் செயல்படுத்தும் நிறுவன விபரம்:

சென்னை பெருநகர் பகுதி தவிர, மாநிலத்தின் இதர பகுதிகளில் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே பெரும் பங்கு வகிக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாலும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீர் திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டபின், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தொடர் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளடக்கிய குடிநீர் திட்டங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதிலும், உள்கட்டமைப்புகளை பராமரிப்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாகும். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (சென்னை பெருநகர் குடிநீர் வாரியம்) சென்னை பெருநகர எல்லை பகுதிக்குள் மட்டும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை ஏற்படுத்தி பராமரித்து வருகிறது.

நிதி நிறுவனங்களின் விபரம் :

நகரங்களுக்கான குடிநீர் திட்டங்களுக்கு கீழ் கண்ட ஆதாரங்களின் மூலம் நிதி பெறப்படுகிறது.

  • மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம், சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அம்ருத் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம்.
  • மாநில அரசின் குறைந்தபட்ச தேவைகள் திட்டம் மற்றும் மூலதன மானிய நிதி
  • உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி
  • KfW நிதி (ஜெர்மன் வங்கி நிதி உதவி)
  • உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் பொது நிதியிலிருந்து பங்களிப்பு செய்து வருகின்றன

தனி நபருக்கான குடிநீரின் அளவுகோள்:

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறங்களுக்கு குடிநீர் வழங்க, தனி நபரின் குடிநீரின் அளவுகோள் கீழ்க்கண்டவாறு பின்பற்றப்படுகின்றன.

மாநகராட்சிகள் – நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர்

நகராட்சிகள் - நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர்

பேரூராட்சிகள் - நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர்(உள்ளாட்சியில் பா.சா.திட்டம் இருப்பின் 135 லிட்டர்)

கடந்த பத்து ஆண்டுகளின் சாதனைகள் (குடிநீர் வழங்கல்) (நகர்ப்புற குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள்)

வ. எண் வருடம் பேரூராட்சிகள் / நகராட்சிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டின் தொகை (ரூ.கோடியில்) மக்கள் தொகை (இலட்சத்தில்)
1 2013-14 11 90.01 4.02
2 2014-15 16 99.97 3.66
1 2013-14 11 90.01 4.02
2 2014-15 16 99.97 3.66
3 2015-16 12 81.66 3.65
4 2016-17 6 38.41 1.28
5 2017-18 8 127.60 5.80
6 2018-19 5 142.29 4.32
7 2019-20 1 52.45 0.92
8 2020-21 6 431.38 7.33
9 2021-22 2 266.03 1.75
10 2022-23 3 119.10 1.48
  மொத்தம் 70 1448.9 34.21

 

I. 2021-2022 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட நகர்ப்புர குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் :

வ. எண் மாவட்டத்தின் பெயர் நகராட்சியின் பெயர் மதிப்பீட்டுத் தொகை (ரூபாய் கோடியில்) மக்கள் தொகை (இலட்சத்தில்) Flow diagram & Salient details
1 நாமக்கல் நாமக்கல் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 256.41 1.59

OpenFlowdiagram

OpenSalientdetails

2 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் 9.62 0.16

OpenFlowdiagram

OpenSalientdetails

    மொத்தம் 266.03 1.75  

II. 2022-2023: ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட நகர்ப்புர குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் :


வ. எண் மாவட்டத்தின் பெயர் நகராட்சியின் பெயர் மதிப்பீட்டுத் தொகை (ரூபாய் கோடியில்) மக்கள் தொகை (இலட்சத்தில்) Flow diagram&Salient details
1 தேனி தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 76.15 0.90

OpenFlowdiagram

OpenSalientdetails

2 தேனி தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்கென அர்ப்பணிக்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டம் 30.00 0.90

OpenFlowdiagram

OpenSalientdetails

3 மதுரை மதுரை மாவட்டம், ஆணையூர் நகராட்சி (தற்போது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி) குடிநீர் அபிவிருத்தி திட்டம். 12.93 0.58

OpenFlowdiagram

OpenSalientdetails

    மொத்தம் 119.10 1.48  

III. 2023-24 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட நகர்ப்புர குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் :

வ. எண் மாவட்டத்தின் பெயர் நகராட்சியின் பெயர் மதிப்பீட்டுத் தொகை (ரூபாய் கோடியில்) மக்கள் தொகை (இலட்சத்தில்) Flow diagram & Salient details
1 மதுரை மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம். 73.03 0.64

OpenFlowdiagram

OpenSalientdetails

2 திருநெல்வேலி 50 எம்.எல்.டி - திருநெல்வேலி மாநகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 295.00 6.88

OpenFlowdiagram

OpenSalientdetails

3 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 30.94 0.31

 

4 ஈரோடு ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 13.12 0.27

 

5 செங்கல்பட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக குடிநீர் விநியோக நிலையம் (WDS) அமைத்தல் 7.61 0.00

 

    மொத்தம் 419.25 8.10  

IV. 2023-2024 ஆம் ஆண்டில் செயலாக்கத்தில் உள்ள நகர்ப்புர குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் :


வ. எண் மாவட்டத்தின் பெயர் நகராட்சியின் பெயர் மதிப்பீட்டுத் தொகை (ரூபாய் கோடியில்) மக்கள் தொகை (இலட்சத்தில்) Flow diagram & Salient details
1 திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கான பாலாற்றை குடிநீர் ஆதாரமாக கொண்ட அபிவிருத்தித் திட்டம் 109.68 0.85

OpenFlowdiagram

OpenSalientdetails

2 தேனி சோத்துப்பாறை அணையை ஆதாரமாகக் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரை பேருராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 13.31 0.28

OpenFlowdiagram

OpenSalientdetails

    மொத்தம் 122.99 1.13