கூட்டு குடிநீர் திட்டம் இயக்கம் மற்றும் பராமரிப்பு

Section: Schemes pages are not under access control

கூட்டு குடிநீர் திட்டம் இயக்கம் மற்றும் பராமரிப்பு:

அரசாணை நிலை எண்.84, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்:10.03.1994-ன் படி ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளாட்சிகள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரிக்கப்படும் திட்டங்கள்:

பராமரிப்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களின் எண்ணிக்கை 523
பயனாளிகள் (குடிமை நிலை வாரியாக )
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊரக குடியிருப்புகள் நிறுவனங்கள், தொழில்கள் நிறுவனங்கள் அமைப்பு மக்கள் தொகை (கோடி)
11 65 317 48,948 567 4.26

பராமரிப்பு முறை:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 523 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் சென்னை, பெருநகர மாநகராட்சியைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள 43 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்டங்களின் மூலம் மேற்படி கூட்டுக் குடிநீர் திட்டங்களின் தலைமை நீரேற்று நிலையங்கள் மற்றும் நீருந்து குழாயகள் மூலம் கடை நிலை பயனாளிகள் வரை அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பராமரிக்கபட்டு வருகிறது. மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி மற்றும் உள்ளூர் விநியோக உள்கட்டமைப்புகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது .

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பராமரிப்பு செலவினம், அவ்வப்போது அரசு நிர்ணயிக்கும் குடிநீர் கட்டண விகிதத்தில் பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஈடு செய்யப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது பெறப்படும் கட்டண விகிதம் அரசால் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டண அமைப்பு:

வ. எண் அரசாணை எண் காலம் கட்டணம் (ரூ/கி லி)
முதல் வரை
ஊரகம் நகரம்
1 அரசாணை நிலை எண்.136, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (வது 4) நாள்:03.10.2002 11.08.1997 02.10.2002 2.25 3.00
2 அரசாணை நிலை எண்.338, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (வது 4) நாள்:18.10.2004 03.10.2002 30.11.2017 3.00 4.50
3 அரசாணை நிலை எண்.39, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (வது 4) நாள்:17.04.2018 01.12.2017 31.03.2018 7.00 9.00
01.12.2017 31.03.2018 7.00 9.00
01.04.2018 31.03.2019 7.35 9.45
01.04.2019 31.03.2020 7.72 9.92
01.04.2020 31.03.2021 8.11 10.42
01.04.2021 31.03.2022 8.51 10.94
01.04.2022 31.03.2023 8.94 11.49

நிறுவனங்கள்/தொழில் நிறுவனங்களுக்கான கட்டணமானது ரூ.30/கிலி இருந்து ரூ.150/கிலி வரை வாரிய நடவடிக்கை .88 (இ ம ப ) பிரிவு, நாள்:8.11.2017 படி பயனாளியின் வகையைப் பொறுத்து கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது.

திட்டத்தின் விகிதாசார செலவை செலுத்திய நிறுவனம் ரூ.45/கிலி
கூட்டு குடிநீர் திட்டத்தின் விகிதாசார செலவை செலுத்தாத நிறுவனங்கள் / தொழில் நிறுவனங்கள்
தொழில்/ வணிக நிறுவனங்கள் ரூ.150/கிலி
தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ.125/கிலி
தனியார் மருத்துவமனை ரூ.125/கிலி
அரசு நிறுவனம் மற்றும் அமைப்பு ரூ.80/கிலி
அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ரூ.30/கிலி
அனாதை இல்லம் ரூ.30/கிலி

கட்டணமானது தேவைக்கேற்ப மறு சீரமைக்கப்படும் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படும் .

வ. எண்
மாவட்டத்தின் பெயர் மொத்த கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நாளொ றுக்கு வடிவமைக்கப்பட்ட குடி நீரின் அளவு மாநகராட்சிகள். நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊரக குடியிருப்புகள். தனியார் பயனாளிகள். மொத்த பயனாளிகள் பயன்பெறும் மக்கள் தொகை.

தலைமைப்பொறியாளர்/ வேலூர்

1 கிருஷ்ணகிரி 18 80.40 1 1 7 4711 5 4725 2120455
2 செங்கல்பட்டு 12 25.63 1 1 1 87 14 108 780852
3 திருப்பத்தூர் 1 32.72 0 4 3 409 0 416 596492
4 காஞ்சிபுரம் 8 5.35 0 0 1 85 5 91 173572
5 இராணிப்பேட்டை 9 26.59 0 5 2 211 2 220 712612
6 கள்ளக்குறிச்சி 4 11.88 0 1 2 116 0 119 445207
7 தருமபுரி 6 63.89 0 1 10 3245 2 3258 1740992
8 விழுப்புரம் 3 4.71 0 0 1 39 0 40 92323
9 கடலூர் 15 15.18 0 1 3 520 0 524 317729
10 திருவண்ணாமலை 27 27.65 0 0 6 790 3 799 634281
11 வேலூர் 4 88.29 1 2 2 462 1 468 1059799
12 திருவள்ளூர் 9 5.96 0 1 0 168 1 171 241234
மொத்தம்(வடக்கு) 115 388.25 3 17 37 10843 33 10939 8915548

தலைமைப்பொறியாளர்/ தஞ்சாவூர்

13 அரியலூர் 8 25.47 0 1 1 954 0 956 696691
14 புதுக்கோட்டை 37 71.82 0 2 4 4558 12 4576 1650322
15 தஞ்சாவூர் 8 19.98 0 0 8 536 1 543 418520
16 திருவாரூர் 4 19.56 0 2 1 413 0 416 277188
17 நாகப்பட்டினம் 6 37.83 0 2 3 1195 4 1204 784435
18 மயிலாடுதுறை 7 29.40 0 0 2 940 2 944 540502
19 பெரம்பலூர் 5 22.37 0 1 3 572 4 580 595281
20 திருச்சி 28 114.11 1 3 9 2123 29 2165 1986522
மொத்தம் (கிழக்கு) 103 340.54 1 11 31 11291 52 11384 6949461

தலைமைப்பொறியாளர் / கோயம்புத்தூர்

21 ஈரோடு 41 109.44 1 0 34 2773 41 2849 1914869
22 நாமக்கல் 13 86.77 0 1 13 2281 25 2321 1457424
23 நீலகிரி 2 1.77 0 0 0 114 2 116 39441
24 கரூர் 15 29.03 0 1 1 1157 2 1161 488398
25 சேலம் 8 186.38 0 4 29 4323 15 4371 3970542
26 திருப்பூர் 15 132.74 1 5 14 2617 6 2645 1629367
27 கோயம்புத்தூர் 12 292.18 1 1 33 1381 225 1639 3124810
மொத்தம்(மேற்கு) 106 838.31 3 12 124 14646 316 15102 12624851

தலைமைப்பொறியாளர் / மதுரை

28 மதுரை 8 80.43 1 3 8 2151 10 2172 1919242
29 தேனி 28 50.16 0 1 11 431 4 450 957227
30 திண்டுக்கல் 30 59.68 1 1 13 2066 5 2085 1556704
31 சிவகங்கை 32 24.05 0 1 4 1221 2 1228 578916
32 இராமநாதபுரம் 34 62.26 0 4 8 2332 5 2348 1579649
33 விருதுநகர் 9 76.72 1 4 9 2145 1 2161 2081326
34 தூத்துக்குடி 23 134.10 0 1 13 1355 130 1499 1384698
35 திருநெல்வேலி 20 78.87 0 2 12 1551 6 1574 1469534
36 கன்னியாகுமரி 13 55.32 1 2 34 491 0 530 1363690
37 தென்காசி 11 60.35 0 6 16 480 3 504 1229804
மொத்தம்(தெற்கு) 119 681.93 4 25 128 14223 166 14551 14120790
மொத்தம் 523 2249.03 11 65 320 48948 567 49911 42610650