பயிற்சி நடவடிக்கைகள்

Section: Support Activities pages are not under access control

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பயிற்சி நடவடிக்கைகள்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனி பயிற்சி மையம் 1983 ஆம் ஆண்டு வாரிய அலுவலர்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையில் திட்டமிடல், செயல் படுத்துதல் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளுக்காக நிறுவப்பட்டது.

முதன்மை பயிற்சி மையம் சென்னை தலைமை அலுவலகத்திலும் மற்றும் பிற 3 பயிற்சி துணை மையங்கள் கோவை, மதுரை மற்றும் திருச்சியில் அமைந்துள்ளன.

பயிற்சி மையங்களின் நோக்கம் :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாதது உள்ள பயிற்சியை வழங்குவது, மேம்படுத்துதல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான தளமாக செயல்படுவது.

மேலும் உதவிப் பொறியாளர்கள் முதல் எழுத்தர் நிலை வரை அனைத்து நிலைகளிலும் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்படும் கருத்தரங்குகள், எக்ஸ்போ மற்றும் இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி தேசிய/சர்வதேச அளவிலான மாநாட்டில் பங்கேற்க பொறியாளர்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

வாட்டர் ஜெம், சீவர் ஜெம் மற்றும் STADD ப்ரோ போன்ற பயன்பாட்டு மென்பொருட்களைப் பயன்படுத்தி தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஐஐடி, மெட்ராஸ் & அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், இந்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் முக்கிய ஆதார மையமாக (Key Resource Centre) அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்க நிதி மூலம் பயிற்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன.

மேலும் கூடுதலாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டIAS ப்ரோபேஷனர்கள், சார்பு துணை ஆட்சியர்கள், அரசு துணைச் செயலாளர் மற்றும் பிரிவு அதிகாரிகளுக்கு “கட்டாய பயிற்சி
துறைகளின் தலைவர்களுக்கும் மாவட்ட பயிற்சி திட்டங்கள்”
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நடத்தப்படுகின்றது.

மேற்கூறியவற்றைத் தவிர, பிற அமைப்புகளால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகள், கலந்தாய்வரங்கம் மற்றும் கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பயிற்சி முறை :

திட்டத்தின் தேவைகளைப் பொருத்து, பங்கேற்பாளர்களுக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன :

  • வகுப்பறை விரிவுரைகள்
  • ஆடியோ மற்றும் விளக்கக் காட்சி வழங்கல்
  • விரிவான ஆய்வுகள்
  • கள ஆய்வுகள்
  • குழு விவாதங்கள்

பயிற்சி உள் கட்டமைப்பு :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பயிற்சி மையங்களில்50 இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட விரிவுரை அரங்குகள், இணைய வசதிகளுடன் கூடிய கணினிகள், LCD ப்ரொஜெக்டர் & ஓவர் ஹெட் புரொஜெக்டர் A.V வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.

பயிற்சிக்கான செலவீனம் :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிதி மற்றும் ஜல் ஜீவன் மிஷன் ஆதரவு நடவடிக்கை நிதியிலிருந்து பெறப்படுகிறது.

ஆண்டு பயிற்சி திட்டம் :

ஒவ்வொரு ஆண்டும், பயிற்சி மையம் மற்றும் 3 துணைப் பயிற்சி மையங்களுக்கான வருடாந்திரப் பயிற்சித் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு, பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

2022-23 ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சித் திட்டங்களின் சுருக்கம்

வரிசை எண் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்ட பயிற்சிகளின் எண்ணிக்கை (என்னம்) பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை (என்னம்)
1 பயிற்சி மையம், தலைமை அலுவலகம்,சென்னை 11 254
2 துணை பயிற்சி மையம், மதுரை 11 257
3 துணை பயிற்சி மையம், கோவை 11 261
4 துணை பயிற்சி மையம், திருச்சி 11 256
மொத்தம் 44 1028

    2022-23 ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சித் திட்டங்களின் தலைப்புகள்

  • புவியியல் தகவல் அமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள்
  • பராமரிப்பில் உள்ள திட்டங்களில் இயந்திர, மின் மற்றும் சூரிய ஆற்றல் கொண்ட உபகரணங்களை பயன்படுத்தி ஆற்றல் திறனை (Energy Efficiency) உறுதி செய்தல் மற்றும் ஆற்றல் தணிக்கை செயல்படுத்துதல்
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஜல்ஜீவன் இயக்கத்தின் வழிகாட்டுதல்களின்படி பொருள்களை ஆய்வகத்தில் சோதனை செய்தல் மற்றும் தர அம்சங்களை களத்தில் உறுதி செய்தல்.
  • குடிநீர் குழாய்களில் ஏற்படும் உயர் மற்றும் தாழ்வு அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து வடிவமைத்தல் (Water Hammer) மற்றும் கட்டிட வடிவமைப்பு (STAAD PRO).
  • கணக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, TDS மற்றும் PFMS தொடர்பான மென்பொருளை கையாளுதல்.
  • குடிநீர்த் திட்டங்களில் நீர் பகிர்மான கட்டமைப்பு வடிவமைத்தல்
  • ஒப்பந்தபுள்ளி நடைமுறை
  • பெரிய கூட்டு குடிநீர்த் திட்டங்களை பார்வையிடல்.
  • நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கையாளுதல்.
  • கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பாதாளசாக்கடைத் திட்டங்களின் செயலாக்கத்தில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.
  • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடு செய்தல் மற்றும் தயாரித்தல்.

நூலகம் :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் இல்லத்தில் நாலாவது மாடியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயிற்சி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 2300 தொழில்நுட்ப, மேலாண்மை, கணினி, சட்டம் மற்றும் ISI புத்தகங்கள் உள்ளன. மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சித் திட்டங்களின் பாடத்திட்டப் பொருட்கள், கருத்தரங்கு நடவடிக்கைகள் போன்றவை நூலகத்தில் உள்ளன.