Section: Support Activities pages are not under access control
திங்கள், 31 மார்ச் 2025
தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்பு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் திட்ட மேலாண்மை, நிதி கணக்கீடு மற்றும் மணிதவள மேலாண்மை பணிகளில், ஒருங்கிணைக்கப்பட்ட மின் ஆளுமை இணையம் (TWADNEST) நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இவ்விணையமானது தேசிய தகவலியல் மையம் (NIC)-யின் உதவியுடன் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இவ்விணையம் பின்வரும் அலுவலக செயல்பாட்டு பகுதிகளை உள்ளடகியது.
- மணிதவள மேலாண்மை அமைப்பு (HRMS)
- நிதி கணக்கியல் அமைப்பு (FAS)
- திட்ட மேலாண்மை அமைப்பு (PMS)
- குடிநீர் விநியோகத்திற்கான கேட்பு வரைவு மற்றும் வசூல் தொகை மேலாண்மை அமைப்பு (DCB)
சிறப்பு அம்சங்கள்
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தினசரி அலுவலக பரிவர்தணைகளை இணைய வழி மூலம் பதிவு செய்வதால் தகவல் சேகரிப்பு உடனுக்குடன் நிகழ்கின்றது.
- இம்மென்பொருளானது இணையம் மற்றும் அகஇணையம் சார்ந்த வலை பயன்பாடாக (Web Application) உருவாக்கப்பட்டுள்ளது.
- வாரியத்தின் அனைத்து அலுவலங்களும் கணினி வலைப்புகளால் பின்னப் பெற்றுள்ளது. அனைத்து அலுவலங்களுக்கும் சமீபத்திய கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாரித்திற்கான பிரத்யேக மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சார்ந்த உதவி வடிவமைப்பு (CAD)
- குடிநீர் வரிசையாக முறை - வடிவமைப்பு மற்றும் பகுத்தாய்வு
- தலைமை நீர்உந்து - வடிவமைப்பு மற்றும் பகுத்தாய்வு.
- கிளை நீர்உந்து - வடிவமைப்பு மற்றும் பகுத்தாய்வு.
- கழிவுநீர் அமைப்பு - வடிவமைப்பு மற்றும் பகுத்தாய்வு.
- கட்டுமான திட்ட மதிப்பீட்டிற்கான பொறியியல் தரவுகள்.
- நிலத்தடிநீர் சேகரிக்கும்தொட்டி - கட்டமைப்பு வடிவமைப்பு.
- Auto CAD/Auto MAP - கட்டிட வடிவமைப்பு.
- கட்டமைப்பு வடிவமைப்பு மென்பொருள்.
இணையவழி ஒப்பந்தபுள்ளி கோரல் மற்றும் சமர்ப்பிப்பு
- ரூ.10 இலட்சத்திற்கு மேல் உள்ள ஒப்பந்தபுள்ளிகள் இணைய வழி மூலம் கோரப்படுகிறது.
- இதை செயல்படுத்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தரவு மையம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கான பிரத்யேகமான தரவுமையம் நிறுவப்பட்டு அணைத்த வகையான வலை சேவையும் மற்றும் தரவுத்தள சேவையும் உருவாக்கப்பட்டு அணைத்து அலுவலங்களும் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.