செறிவூட்டும் கட்டமைப்புகள்- Recharge Structures
செறிவூட்டும் கட்டமைப்புகள்- Recharge Structures
நீடித்தநிலைப்புதன்மை ஆதாரங்கள்- செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் வழியாக நீர்செறிவூட்டல், கருக்குறிச்சி கிராமம், நாமக்கல் மாவட்டம்.
வெற்றி கதைகள்:
ஆழமான கடினப்பாறை பிளவு பகுதிகளில் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் நீர் செறிவூட்டல் மாதிரி திட்டம் கருக்குறுச்சி குடியிருப்பு, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு 1991 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அக்குடியிருப்பின் மக்கட்தொகை எண்ணிக்கை 2310 ஆகும் இந்த குடியிருப்பானது குடிநீர் வழங்கல் (30 lpcd) நபர் ஒன்றுக்கு வகையைச் சார்ந்தது/கீழ் வருகிறது.
இந்த குடியிருப்பில் நான்கு ஆழ்துளை கிணறுகளும் மற்றும் ஒரு திறந்த வெளிக்கிணறும் உள்ளன. இவையனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. இருப்பினும், 12 நீர்பாசன கிணறுகளும் குடியிருப்பில் அருகில் உள்ளன. மின்விசை ஆதாரத்திலிருந்து பெறப்படும் தொடுதிறன் நீடித்தநிலைத்தன்மையுடன் கோடை காலத்தில் இல்லை, நீரின் அளவு/மட்டம் (அடிமட்டத்தில் சென்றுவிட்டதாலும்) இயற்கையாக நீர் செறிவூட்டல் கடினப்பாறை பிளவுகளில் போதுமானதாக இல்லை.
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் ஆழமாகவும் மற்றும் நீர்வழங்கக்கூடிய பிளவுகளில் நீர்வரத்து நிறுத்தப்படுவதாலும், அதனை நீர்செறிவூட்டும் முயற்சியின் மூலம் நிலத்தடி நீர்வளத்தை அந்த பகுதியில் அதிகரிக்க செய்யமுடியும்.
மாதிரி கிணறுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுசெய்யப்பட்ட கண்காணிப்பு கிணறுகளை கண்காணித்து, நீரியல் சார்ந்த தகவல்களை முன்பின் விரிவான புவி இயற்பியல் ஆய்வின்மூலம் வேறுபட்ட பிளவு அமைப்புகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மின் பதிவு மூலம் துல்லிய பிளவுகளின் ஆழத்தையும் மற்றும் செயிலிழந்த ஆழ்துளை கிணறுகள் நீர்செறிவூட்டு கிணறுகளாகவும் மாற்றலாம்.
சேமிப்பு தொட்டி திறன் 210 கட்டமைப்பின் அருகாமையில் அமைத்து மேற்பரப்பில் வழிந்தோடுகிற நீரை தொட்டியில் சேகரித்து செயலிழந்த ஆழ்துளை கிணற்றுக்கு நீர்செறிவூட்டு குழாய் மூலம் நீரை ஊடுறுவ அனுப்பலாம்.
மேற்கண்ட கட்டமைப்புகளின் மூலம் கிணறுகளில் 10-12 மீ நிலத்தடி நீர் மட்டம் வரை உள்ளது மாறாக கட்டமைப்பை அமைத்த ஆரம்ப வருடங்களில் 38-42 மீ நிலத்தடி நீர் மட்டம் நீரின் அளவு இருந்ததது. விவசாய கிணறுகளிலும் கணிசமான அளவு நிலத்தடி நீர் உயர்ந்து நீரின் தரம் கணிசமாக உயர்ந்து TDS (Total dissolved Solids) மொத்த கரை உப்புக்கள் குறைந்து காணப்படுகிறது.