Check Dam

Section: Hydrogeology pages are not under access control

4.தடுப்பணை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், வளவந்தி கொம்பை பஞ்சாயத்து, கொசவன்குட்டை கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணையின் நன்மைகள்

தலைப்பு:
கிராமப்பெயர் : கொசவன்குட்டை
பஞ்சாயத்து : வளவந்தி கொம்பை
ஒன்றியம் : சேந்தமங்கலம்
மாவட்டம் : நாமக்கல்.
திட்டம் : தேசிய ஊரக குடிநீர் 2009-2010 திட்டம்

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஒன்றானது அட்சரேகை 11⁰,00,00 மற்றும் 11⁰ 36 10N மற்றும் தீர்க்கரேகை 77⁰40 00E மற்றும் 78⁰ 80 00E அமைந்துள்ளது. இம்மாவட்டம் காவேரி ஆற்றின் விளிம்பில் தென்மேற்கு எல்லையாக கொண்டுள்ளது. கிழக்கு பகுதியில் கொல்லிமலை அமைந்துள்ளது. ஆண்டு சராசரி மழைஅளவு 775.7 மி.மீ ஆகும்.

நிலத்தடி நீர் வளமும், நீரின் தரமும் ஆறுகளில், ஒடைகளில் துணைநதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் மேம்பட்டிருக்கிறது. இவைபேன்ற முறைகளால் மழைநீர் நீர்செறிவூட்டும் கட்டமைப்பின் மூலம் சேகரிக்கப்படுவதுடன். அதன்மூலம் நிலத்தடிநீரும் செறிவூட்டப்படுகிறது, த.கு.வ.வாரியம் ஏராளமான நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளான தடுப்பணைகளை ஒடையின் குறுக்கே மற்றும் சிற்றாற்றிலும் நீர்வழங்கும் ஆதாரங்களின் அருகில் நீரின் அளவையும், தரத்தையும் நாமக்கல் மாவட்டத்தில் மேம்படுத்தியுள்ளது.

இம்மாவட்டத்தில் நீர்செறிவூட்டும் பொருட்டு நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், தடுப்பணைகள், ஊரணிகள், மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை செறிவூட்டுவது போன்ற கட்டமைப்புகளை வெவ்வேறு திட்டங்களின் கீழ் (NRDWP. PMGY, NABARD, ARWSP, AGWRS) கட்டப்பட்டுள்ளன.

நீர் வழங்கும் ஆதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு கொசவன்குட்டை கிராமத்தில் உள்ளூர் ஒடையின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதாவது திறந்தவெளிகிணறு (பொம்மசமுத்திரம்) இந்த தடுப்பணையானது சிறந்த எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் இருக்கும் நீர் வழங்கும் கட்டமைப்பு

சேந்தமங்கலம் ஒன்றியம், வளவந்தி கொம்பை பஞ்சாயத்தில் கொசவன் குட்டையின் அருகில் உள்ளூர் ஒடையில் இருக்கின்ற திறந்தவெளி கிணறு மூலம் வழங்கப்பட்ட குடிநீர் (பொம்பசமுத்திரம் கிராமம், திறந்தவெளி கிணற்றின் அட்சரேகை கடல்மட்டத்திலிருந்து அதனுடைய உயரம் 215.91 மீ அமைந்துள்ளது. தற்போது பொம்மசமுத்திரம் திறந்தவெளி கிணற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் வழங்கப்படுகிறது.

கட்டமைப்பு இடம்

மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கொசவன்குட்டை பகுதிக்கான ஒரு விரிவான ஆய்வு பாறை வகை, வானிலை தடிமன், சாய்வு, மண்வகை நீர்ப்பிடிப்பு பகுதி, ஒட்ட விவரங்கள் பற்றிய பருவநிலை காலத்திற்கான, ஆய்வின் அடிப்படையில், 15 மீ நீளமுள்ள தடுப்பணை பொம்மசமுத்திரம் கிராம திறந்தவெளி கிணறு உள்ளூர் ஒடையில் (கொல்லிமலை தோற்றுவிக்கிறது) அருகில் பரிந்துரைக்கப்பட்டது. ஒரு தடுப்பணை (நீளம் 15 மீ) பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை அமைந்திருக்கும் இடம் உள்ளூர் ஒடையில் குடிநீர் வழங்கும் திறந்த வெளிகிணறு. அருகில் இதனுடைய நீரோட்ட திசையானது ஒடையின் கிழக்கிலிருந்து மேற்காகும்.

தடுப்பணையின் புவியியல் ஒருங்கிணைப்பான்களை அளவிடுவது (GPS Trimble Juno sb- Terra syn) is தீர்க்கரேகை 11⁰1904049 N 78⁰1815029 E மற்றும் உயரம் 224.76 மீ ஆகும்.தடுப்பணையின் நீர்பிடிப்பு பகுதி 7.5 கிமீ ஆகும்

நிலத்தடிநீர் அளவு

திறந்தவெளி கிணற்றுக்கு கீழ்நோக்கி அமைந்துள்ள தடுப்பணை நிலத்தடி நீரின் அளவு அளவிடப்பட்டு தடுப்பணை கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னரும் நிலத்தடிநீரின் அளவின் ஏற்ற இறக்கங்களை அளவிடப்படுகிறது. நீரின் அளவு ஏற்ற இறக்கங்களைஅட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. நீர் அளவு அலகீடு மீட்டர் ஆகும் (bgl-நிலமட்டத்திற்கு கீழே).

தொகை:

மதிப்பீட்டுத் தொகை : ரூ.4.07 இலட்சங்கள்
செயல்படுத்தப்பட்ட செலவு : ரூ.3.98 இலட்சங்கள்
ஆரம்பிக்கப்பட்ட தேதி : 31.07.2009
முடிக்கப்பட்ட நாள் : 15.1.2010

பகுப்பாய்வு:

தொகை தடுப்பணை பகுப்பாய்வின் நன்மைகள்:

a) தடுப்பணையின் விவரங்கள்:
தடுப்பணையின் நீளம் : 15 மீ
தடுப்பணையின் உயரம் : 1.2 மீ
தொகை : ரூ.3.98 இலட்சங்களில்
அருகிலுள்ள மழைஅளக்கும் கருவி அமைந்துளள இடம் : சேந்தமங்கலம்
b) தடுப்பணையின் சேமிப்புதிறன்:
நீர்பரவும் இடம் , அதிகபட்ச நீளம் : 250 மீ
அகலம் : 15 மீ
பயனுள்ள உயரம் : 0.5 மீ
சேமிக்கப்பட்ட நீரின் அளவு : 250x15x0.5=1875 மீ3
c) கணக்கீடு:

ஆவியாதல் மூலம் இழப்பு 10 விழுக்காடு

தடுப்பணையின் மீதமுள்ள கொள்ளளவு=(1875 x0.1) =1687 மீ3

அதனால் தடுப்பணை அமைக்கும்போது 1687 மீ3 கொள்ளளவு கொண்ட நீர் பூமியில் உறிஞ்சப்படுகிறது.

தடுப்பணை அமைக்காவிடில் சிறிதளவு கொண்ட நீர் மட்டம் (10 % (சதவீதத்தின்) 1687 மீ3=169 மீ3) நிலத்தினுள் நீர் செறிவூட்டப்படும்.

அதனால் தடுப்பணையின் மட்டம் கூடுதல் கொள்ளளவு கொண்ட நிலத்திலுள்ள செறிவூட்டப்படுகின்றது 1687-169=1518 மீ 3

d) தடுப்பணையின் நன்மைகள்:

பொதுவாக, இயல்பான மழைபொழிவின்போது வருடத்திற்கு இருமுறை தடுப்பணை நிரம்புகிறது.

அதனால், (2x1518) = 3036 மீ3, கூடுதல் கொள்ளளவு நீர் வருடம் முழுமைக்கும் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது..

Agriculture usage : 80%.

உந்திவிகிதம்/ஆற்றல் சேமிப்பு

தடுப்பணை அமைக்கப்பட்ட பின்பு, பருவகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் அதனால் குடிநீர் ஆதார வளமும் மேன்மையடையும் இதன் காரணமாக மின்சாரம் உபயோகம் கணிசமாக குறைவதுடன் நீர்இறைக்கும் காலஅளவும் குறையும்.

நீர் அளவு பகுப்பாய்வு

பருவகால கட்டத்தில் மழைநீர் மொத்தமாக ஒடி வரண்டுவிடுகிறது. இந்த தடுப்பணை மூலம் மழைநீர் தக்கவைக்கப்பட்டு மற்றும் நிலத்தினுள் ஊடுருவ அனுமதிக்கப்பட்டு அங்கே நீர்அளவு அருகிலுள்ள இடத்தில் கணிசமாக உயருகிறது. இது தடுப்பணைக்கு அருகிலுள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து அவ்வபோது கண்காணிக்கப்படுகிறது. கண்காணிக்கப்பட்ட அளவின் மூலம் நீரின் அளவு பராமரிக்கப்படுவதுடன் அதனை கூடுதலாக நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கும் பயன்படுத்தலாம் தடுப்பணையினால் வந்த விளைவு நீரின் அளவு மழைகாலங்களில் உயர்வதுடன் நிலத்தடிநீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததுடன் பருவகாலத்திற்கு பின்னும் நிலத்தடி நீரின் அளவு குறிப்பிட்ட காலம் பராமரிக்கப்படுகின்றது.

நீர் ஆதாரம் பகுப்பாய்வு

நிலத்தடிநீரின் மாதிரி தடுப்பணையின் அருகிலுள்ள கண்காணிப்பு கிணற்றில் ஆகஸ்ட் 2009-க்கு முன் எடுக்கப்பட்டு தடுப்பணை கட்டப்பட்டபின்னும் (டிசம்பர் 2010-ல்) எடுத்து முக்கியமாக வேதியல் அளவுகளுக்கு பரிசோதிக்கப்பட்டது.

நீர் மாதிரி பகுப்பாய்வு முடிவு – கொசவன்குட்டை கண்காணிப்பு கிணறு கீழ்கண்டவாறு,

அளவுக்கு தடுப்பணை கட்டுவதற்கு முன் தடுப்பணை கட்டிய பின்
மொத்த கறைந்த திடப்பொருட்கள் 765 345
கடினத்தன்மை 348 96
கால்சியம் 86 22
மெக்னீசியம் 32 10
சோடியம் 29 52
பொட்டாசியம் 19 9
இரும்பு 0.15 0.15
நைட்ரைட் 14 7
குளோரைடு 140 52
பிளோரைடு 0.4 0
சல்பேட் 76 42

இந்த பகுப்பாய்வில் உணர்த்துவது என்னவென்றால் தடுப்பணை கட்டப்பட்டபின் நீரின் ஆதாரம் மேம்பட்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

இந்த இடத்தில் இருக்கும் நீர்செறிவூட்டு கட்டமைப்பினால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி மேலும் தங்களுடைய திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். விவசாய பெருமக்கள் இந்த தடுப்பணை குறித்து நன்றியை தெரிவித்துள்ளனர். நீர் சேமிக்கப்பட்டும் கூடுதலாக தேக்கிவைக்கப்பட்டும் அவர்களுக்கு 3 மாதங்களுக்கு பயனுள்ள சாகுபடிக்கு உதவுவதாக கூறுகின்றனர்.

முடிவுரை

இதுபோன்ற நீர் செறிவூட்டு கட்டமைப்பு அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுவதுடன் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கும் பயன்படுகிறது.