Section: Hydrogeology pages are not under access control
புதன், 02 ஏப்ரல் 2025
நிலத்தடி டைக்(DYKE)
நிலத்தடி டைக்
தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமம் தரை கீழ் தடுப்பணை
பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தரை கீழ் தடுப்பணை PMGY திட்டதின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை ஒன்றியம் அதிநுகர்வு அடிப்படையில் வருகிறது. தரை கீழ் தடுப்பணை வெங்கனூர் அருகில் ஒடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது (மணிமுத்தாறு நதியுடன் சங்கமிக்கிறது). அதனுடைய ஆழம் 3 மீட்டர் ஆகும். தடுப்பணை கட்டும் பணி ஜீன்2003-ல் தொடங்கப்பட்டு டிசம்பர் 2003-ல் நிறைவடைந்தது.
தடுப்பணையின் நீர்மட்டம் ஜனவரி 2004 முதல் மாதவாரியாக கண்காணிக்கப்பட்டு 2004 ஜனவரியில் 12.0 மீட்டரில் இருந்து மே 2008-ல் 5.90 ஆக நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.
தற்போதுள்ள குடிநீர் ஆதாரங்களின் பயனைத்தவிர அருகிலுள்ள விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.