கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு ஆணை எண்.201/நாள் 30.11.2020 இல் ரூ.440.63 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 186524 மற்றும் 208659 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 14.93 மில்லியன் லிட்டர் மற்றும் 16.29 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கான நீர் ஆதாரம் காவிரி ஆற்றில் மறவாப்பாளையம், சேமங்கி மற்றும் செவ்வந்திபாளையம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு 376.19 கி.மீ நீளமுள்ள பிரதான நீருந்து குழாய்கள் மூலம் 130 நீருந்து நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும். பின்னர் ஊராட்சி தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளிலிருந்து 741.457 கி.மீ. பிரிவு நீர்உந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே பயனில் உள்ள 896 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 149 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படவுள்ளது,
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து, 1555.36 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 40502 வீட்டிணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 26.02.2021 அன்று வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 07/2023 க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
திட்ட விவரம்
தலைமையிடம் | 1. மறவப்பாளையம் விநாயகர் கோவில் அருகில் 2. சேமங்கி புகளூர் நொய்யல் நீர் பாசன வாய்க்கால் அருகில் 3. செவந்திபாளையம் புகளூர் நொய்யல் நீர் பாசன வாய்க்கால் அருகில் |
---|---|
நீராதாரம் | காவிரி ஆறு, நீர் சேகரிப்பு கிணறு |
நீர் சேகரிப்பு கிணறுகள் | 2 எண்ணம் |
நீர் உறிஞ்சி கிணறுகள் | 4 எண்ணம் (பயனில் உள்ளவை) |
நீர் உந்து நிலையம் | 2 எண்ணம் |
தரைமட்டத்தொட்டிகள் | 45 எண்ணம் |
மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டிகள் | 149 எண்ணம் |
நீரேற்றும் குழாய்கள் ( குழாய் அளவு விபரங்கள்) | 377.89 கிமீ |
பகிர்மானக் குழாய்கள் (ஊரக துறை மூலம் செயல்படுத்தப்படும்) | 934.170 கிமீ |
செயல்பாட்டு வீட்டுக் குடிநீர் இணைப்புகள் (ஊரக துறை மூலம்செயல்படுத்தப்படும்) | 40,502 எண்ணம் |
ஆண்டு பராமரிப்பு செலவு | ரூ. 10.58 கோடி |
1000 லிட்டர் குடிநீருக்கான செலவு | ரூ.19.41 |
தனிநபருக்கான செலவு | ரூ.21117 /- |