ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள் மற்றும் 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான பவானி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம்
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள் மற்றும் 547 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கான பவானி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண். 54 / ந.நி மற்றும் கு.வ.துறை / (கு.வ.1) / நாள் 29.05.2018 –ல் ரூ. 224.00 கோடிக்கு வழங்கப்பட்டது. இக் குடி நீர் திட்டம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி கடன் மற்றும் குறைந்த பட்ச தேவை திட்டம் மூலமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
இத்திட்டம் இடைக்கால மக்கள் தொகை (2035) 4.49 இலட்சம் மக்களுக்கு 16.40 மில்லியன் லிட்டர், உச்சகாலம் (2050) மக்கள் தொகை 5.48 இலட்சம் மக்களுக்கு 25.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக குடியிருப்புகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு பவானி ஆற்றின் கரையில் கொடிவேரி கதவணைக்கு மேலே நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு இயல்பு நீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 29.20 கி.மீ தூரத்திலுள்ள திங்களூர் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகப்பு நிலையத்தில் (17.23 மில்லியன் லிட்டர் கொள்ளளவு) இயல்பு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 11.05 இலட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து 32 எண்ணம் கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் 80 எண்ணம் கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு 549.53 கி.மீ நீளமுள்ள பிரதானக் குழாய்கள் மூலம் நீரேற்றப் படும். புதியதாக அமைக்கப்பட்டுள்ள 45.35 கி.மீ நீளமுள்ள மற்றும் ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு 07.11.2018 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு 25.03.2022 முதல் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இத் திட்டத்தின் மூலம் 3.47 இலட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 15.24 மில்லியன் லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.