கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள பத்பனாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சி , 3 பேரூராட்சிகள் மற்றும் 55 ஊரக குடிய

Section: Combined Water Supply Schemes acivements pages are not under access control

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள பத்பனாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொதுவான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் குழித்துறையார் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் ஆணை எண். 40/ நாள் 21.04.2017 - ன் மூலம் 174.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி (NABARD) , ஜெர்மன்வங்கி நிதி உதவி (Kfw), குறைந்த பட்ச தேவை திட்டம்(MNP) மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2025) மக்கள் தொகையின் படி, 3.10 இலட்சம் மக்களுக்கு 31.81 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2035) மக்கள் தொகையின் படி 3.44 இலட்சம் மக்களுக்கு 35.12 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.

இக்கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான இயல்பு நீர் குழித்துறையார் ஆற்றில், ஆத்தூர், கல்லுபாலம் அருகில் 8 மீட்டர் விட்டமுள்ள கிணறு மூலம் சேகரிக்கப்பட்டு அசல் நீர் உந்து குழாய்கள் மூலம் காட்டாத்துறை அருகில் அமைக்கப்பபட்டுள்ள 36.88 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் 495.390 கி. மீ நீர் உந்து குழாய்கள் மூலம் புதிதாக அமைக்கப்பபட்டுள்ள 33 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டியில் சேகரிக்கப்பட்டு பயனளிகளுக்கு ஏற்கெனவே அமைந்துள்ள மேல் நீர்தேக்கத்தொட்டி மற்றும் புதிதாக இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 27 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் ஏற்கெனவே அமைந்துள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 54.147 கி. மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 09.05.2018 ல் வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 3 இலட்சத்து 11 ஆயிரம் மக்களுக்கு நாளொன்றுக்கு 21.60 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

இத்திட்டம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்க தயார் நிலையில் உள்ளது.

Flow Diagram

Salient Details