நாமக்கல் மாவட்டம், 669 ஊரக குடியிருப்புகள் ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு பேரூராட்சி மற்றும் சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்.

Section: Combined Water Supply Schemes acivements pages are not under access control

நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சி, படவீடு பேரூராட்சி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 669 ஊரக குடியிருப்புகள், சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு ஆணை எண். 16 நாள் 05.03.2018-ல் ரூ. 399.46 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டு நபார்டு வங்கி நிதி மற்றும் உள்ளாட்சிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தபட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2035) மக்கள் தொகையின்படி 4.92 இலட்சம் மக்களுக்கு 24.28 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2050) மக்கள் தொகையின்படி 6.61 இலட்சம் மக்களுக்கு 32.65 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கோட்டை கதவணைக்கு மேலே காவிரி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றிலிருந்து நீரானது 12.57 கி.மீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ள பிரதானக் குழாய்கள் மூலம் பல்லக்காபாளையத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (25.51 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு) கொண்டு செல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 189.35 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய்கள் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 46 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு 542.33 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் ஏற்கெனவே அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 28 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் ஏற்கெனவே உள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 26.00 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 16.08.2018-ல் வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு 07.01.2023 முதல் ஒப்பந்ததாரர் பராமரிப்பில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4 இலட்சத்து 92 ஆயிரம் மக்களுக்கு நாளொன்றுக்கு வரையறுக்கப்பட்ட அளவான 17.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

Flow Diagram

Salient Details