வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 944 ஊரக குடியிருப்புகளுக்கான காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

Section: Combined Water Supply Schemes acivements pages are not under access control

2010-11 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பில் காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி , 11 நகராட்சிகள் (திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் அரக்கோணம் ), 5 பேரூராட்சிகள் ( நாட்ராம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா) மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் (ஆலங்காயம், அணைக்கட்டு, ஆற்காடு, குடியாத்தம், ஜோலார் பேட்டை, கீ. வ. குப்பம், கந்திலி, கணியம்பாடி, காட்பாடி, மாதனூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வேலுர், வாலாஜா ) உள்ள 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1295.00 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டம், இடைக்கால வருடமான 2027ல் 21.49 இலட்சம் மக்கட் தொகையும், உச்ச கட்ட வருடமான 2042ல் 24.46 இலட்சம் மக்கட் தொகையும் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு முறையே 181 மில்லியன் லிட்டர் மற்றும் 215 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில், மேட்டூர் அணையின் கீழ்புறத்தில் செக்கனூர் தடுப்பணையிலிருந்து தற்போது நாளொன்றுக்கு தேவையான 123.30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் முறையே காற்றூட்டல் (­aeration), திடப் பொருள் திரட்டுதல் ( coagulation), துகள் திரட்டல் (Flocculation) படியவிடுதல், (Sedimendation) வடிகட்டுதல் (Filtration) என சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னர் குளோரின் மூலம் நுண்ணுயிர் நீக்கம் (Disinfection ) செய்யப்பட்டு தேவையான குளோரின் அளவுடன் பயனாளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொட்டில்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் முழு அளவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 79.26 கி.மீ. தொலைவில், கடத்தூரில் உள்ள பிராதான தரைமட்ட நீர் சமன்பாட்டு தொட்டிக்கு மூன்று இடைப்பட்ட நீர் உந்து நிலையங்கள் மூலமாக 1500 மி.மீ.விட்டமுள்ள பிரதானக் குழாய் வழியாக நீரேற்றம் செய்யப்படுகிறது.

பின்னர் கடத்தூர் பிரதான நீர் சமன்பாட்டுத் தொட்டியிலிருந்து 391.49 கி.மீ. தொலைவில் உள்ள அரக்கோணம் வரை, மூன்று இடைப்பட்ட நீர் அழுத்த முறிவுத் தொட்டிகள் மூலமாக 1600 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை விட்டமுள்ள தன்னோட்டக் குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 1657 கிமீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக ஏற்கனேவ உள்ள 1155 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 34 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு 157 தரைமட்ட தொட்டிகள் மூலமாக நீரேற்றப்பட்டு பின்னர் ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதியதாக 304.14 கிமீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் முடிவுற்று, தற்பொழுது 11 நகராட்சிகளுக்கும், 5 பேரூராட்சிகளுக்கும் , வேலூர் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது இத்திட்டத்தின் 3 சிப்பங்கள் முறையே 14.09.2015, 01.12.2015 மற்றும் 15.04.2016ஆகிய தேதிகளிலிருந்து ஒப்பந்தக்காரரின் பராமரிப்பில் உள்ளது. இத்திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 28.12.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 18 இலட்சத்து 68 ஆயிரம் மக்களுக்கு நாளொன்றுக்கு தற்போதையதேவைக்கு 80.65 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

Flow Diagram

Salient Details