கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 708 ஊரகக் குடியிருப்புகள்மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான(Bulk Quantity) கூட்டுக் குடிநீர் திட்டம்
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 708 ஊரகக் குடியிருப்புகள்மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான(Bulk Quantity) கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்.20/நாள் 13.02.202-இல் ரூ.362.20 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் இடைநிலை மக்கள் தொகை 457390 (2035), உச்சநிலை மக்கள் தொகை 642830 (2050) க்கு முறையே 26.34 மில்லியன் லிட்டர்கள் மற்றும் 36.15 மில்லியன் லிட்டர்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் 3 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
- சிப்பம்:1 -இதன் மூலம் அன்னூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 8 கிராம ஊராட்சிகள் மற்றும் அவிநாசி ஒன்றியத்தைச் சேர்ந்த 7 கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள திருப்பூர் மற்றும் 412 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான நீர் தேவை முழுவதும் தற்போது பயன்பாட்டிலுள்ள திருப்பூர் திட்டத்தின் பொகலூர் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட உள்ள 16 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து 281.39 கி.மீ சுத்த நீரேற்று குழாய்கள் மூலம் 89 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகின்றது. பின்னர் 64 கி.மீ பகிர்மான குழாய்கள் மூலம் மக்களுக்கு பாதுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.
- சிப்பம் 2-இத்திட்டத்தின் மூலம் அன்னூர் ஒன்றியத்தை சேர்ந்த 13 கிராம ஊராட்சிகள், அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த 16 கிராம ஊராட்சிகள், மற்றும் சூலூர் ஒன்றியத்தை சேர்ந்த 4 கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள கோவை மாவட்டத்திலுள்ள அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான நீர் தேவை முழுவதும் தற்போது பயன்பாட்டிலுள்ள அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் வெள்ளிகுப்பம்பாளையத்திலுள்ள தரை மட்ட தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட உள்ள 33 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து 466.492 கி.மீ சுத்த நீரேற்று குழாய்கள் மூலம் 108 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகின்றது. பின்னர் 77 கி.மீ பகிர்மான குழாய்கள் மூலம் மக்களுக்கு பாதுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.
- சிப்பம் 3-இத்திட்டத்தின் மூலம் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த 8 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த 10 கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பவானி ஆற்றில் மேட்டுப்பாளையத்திற்கு வடக்கே சிறுமுகை குத்தேரிபாளையம் இடத்தில் நீர் சேகரிப்பு கிணறு அமைய உள்ளது . நீர் சேகரிப்பு கிணற்று இருந்து 25.698 கி.மீ இயல்பு நீரேற்று குழாய்கள் மூலம் கொள்ளவு கொண்ட இடத்தில இருந்து நீர் சுத்தீகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல படுகிறது. பின்னர் 161.225 கி.மீ இருந்து சுத்த நீரேற்று மற்றும் பிரதான நீரேற்று குழாய்கள் மூலம் 10 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 63 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது. பின்னர் 84.50 கி.மீ பகிர்மான குழாய்கள் மூலம் மக்களுக்கு பாதுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 01-10-2020யில் பெறப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் 07/2023 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.