தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மற்றும் மயிலாடும்பாறை தேனி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மற்றும் மயிலாடும்பாறை தேனி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்.30/ நாள் 02.03.2020 மூலம் ரூ. 162.43 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி (NABARD) மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டம்(MNP) நிதி உதவியின் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டதின் மூலம் இடைக்கால (2036) மக்கள் தொகையின் படி, 1.58 இலட்சம் மக்களுக்கு 9.30 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2051) மக்கள் தொகையின் படி 1.78 இலட்சம் மக்களுக்கு 10.70 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
இக்கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான இயல்பு நீர் வைகைஅணையின் கீழ்பகுதியில் மீட்பு சிற்றணையிலிருந்து மேல்பகுதியில் 6 மீட்டர் விட்டமுள்ள கிணறு மூலம் சேகரிக்கப்பட்டு, 4.05 கி.மீ நீளத்திற்கு மூல நீர் உந்து குழாய்கள் மூலம் கோவில்பட்டி கிராமம் அருகில் அமைக்கப்படவுள்ள 10.70 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. பின்னர் அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 172.00 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள 40 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர், தரைமட்ட நீர்தேக்கத்தொட்டியிலிருந்து ஏற்கெனவே பயனில் உள்ளா மேல் நீர்தேக்கத்தொட்டிகளுக்கும் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 41 எண்ணம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கும் 256.11 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் ஏற்றப்படுகிறது. அதப்ன் பிறகு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளி இருந்து ஏற்கெனவே அமைந்துள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள 24.50 கி. மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 28.09.2020 ல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 86 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் 06/2023ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.