கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாச்சலம், மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களை சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாச்சலம், மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களை சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண். 47/ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (குவஉ) துறை/நாள்.21.04.2020 ன் படி ரூ.479.00 கோடிக்கு வழங்கப்பட்டு உள்ளது. தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி (NABARD) மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2037) மக்கள் தொகையின் படி 6.68 இலட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 31.26 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2052) ) மக்கள் தொகையின் படி 7.92 இலட்சம் மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 39.43 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிட வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான நீர் ஆதாரம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க உபரி நீரை நீராதாரமாகக் கொண்டு கீழ் வளையமாதேவி கிராமத்தில் 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீரினை தலைமை நீரேற்று நிலையத்தில் அமைக்கப்படவுள்ள 22.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டுகிறது. பின்னர்44.45 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் வழியாகவும் மற்றும் பிரதான நீர் உந்து குழாய் 134.16 கி.மீ வழியாகவும் 4 நீர் உந்து நிலையங்களுக்கு கொண்டு செல்லப் படுகிறது. பின்னர் துணை நீர் உந்து குழாய். -65.93 கி.மீ மூலம் நீர் உந்து நிலையம் தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளில் இருந்து 29 பிரதான தரைமட்ட தொட்டிகளுக்கும் பிரதான தரைமட்ட தொட்டிகளிலிருந்து 146 ஊராட்சி தரைமட்டத் தொட்டிகளுக்கும் மற்றும் பொது 6 தரைமட்டத் தொட்டிகளுக்கும் துணை நீர் உந்து குழாய் 263.47 கி.மீ மூலம் குடிநீர் சீராக விநியோகிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளின் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றுக் குழாய் 61.734 கி.மீ மூலம் ஊராட்சிகளின் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றுக் குழாய் 340.383 கி.மீ மூலமும் குடிநீர் ஏற்றப்பட்டு தற்போது உபயோகத்தில் உள்ள பகிர்மான குழாய் மற்றும் புதிய பகிர்மான குழாய் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, சிப்பம் 1 ற்கு -25.02.2021 , சிப்பம் 2 ற்கு -11.12.2020 ல் மற்றும் சிப்பங்கள் 3 மற்றும் 4 ற்கு 04.11.2020 அன்றும் பணி ஆணை வழங்கப்பட்டு.
பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் 08/2023 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.