சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லுர், இடங்கணச்சாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லுர், இடங்கணச்சாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அரசு ஆணை எண். 96 நாள். 09.09.2020- மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டம், தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி (NABARD) மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2036) மக்கள் தொகையின் படி, 5.23 இலட்சம் மக்களுக்கு 50.70 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2051) மக்கள் தொகையின் படி 6.03 இலட்சம் மக்களுக்கு 58.32 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
இக்கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான இயல்பு நீர் காவிரி ஆற்றில், பூலாம்பட்டி அருகில் 19.00 மீட்டர் x 7.25 மீட்டர் அளவுள்ள கிணறு மூலம் சேகரிக்கப்பட்டு, 41.750 கி. மீ நீளம்முள்ள இயல்பு நீர் உந்து குழாய்கள் மூலம் கல்பாரப்பட்டி அருகில் அமைக்கப்படவுள்ள 53.23 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் 1080.590 கி. மீ நீர் உந்து குழாய்கள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள 76 எண்ணம் தரைமட்ட நீர்தேக்கத்தொட்டியில் சேகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஏற்கெனவே அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் புதிதாக இத்திட்டத்தின் மூலம் கட்டப்படவுள்ள 259 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஏற்கெனவே அமைந்துள்ள பகிர்மான குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள 176.982 கி. மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு பாதுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது இத்திட்டம் 5 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, சிப்பம் 1 ற்கு -24.02.2021 ல் மற்றும் 4 சிப்பங்களுக்கு 12.01.2021 அன்றும் பணி உத்தரவு வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.