தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சி (திருவிடைமருதூர் -1, வேப்பத்தூர்-1) குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம்
கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 67 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சி (திருவிடைமருதூர்-1. வேப்பத்தூர்-1) குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அரசு ஆணை எண்.201 / நாள்.30.11.2020-ல் ரூ.117.09 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால(2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 91,276 மற்றும் 1,02,104 ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஓருவருக்கு ஊரகக்குடியிருப்புகளுக்கு 55 லிட்டர் வீதம், மற்றும் பேரூராட்சி குடியிருப்புகளுக்கு 70 லிட்டர் வீதம் இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 5.37 மற்றும் 5.97 மில்லியன் லிட்டர் ஆகும்.
இத்திட்டத்திற்கு தேவையான குடிநீர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் குடிதாங்கி அருகில் அமைக்கப்பட உள்ள எட்டு நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு 3.35 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது, பின்னர் 70.97 கி.மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்படவுள்ள குழாய்கள் மூலம், புதிதாக கட்டப்படவுள்ள 24 தரைமட்ட தொட்டிகளிலும் நீர் சேகரிக்கப்பட உள்ளது. அங்கிருந்து 101.15 கி.மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்படவுள்ள குழாய் மூலம் ஏற்கனவே உள்ள 142 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டபடவுள்ள 12 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் இருந்து ஏற்கெனவே பயனில் உள்ள பகிர்மான குழாய் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 14174 புதிய வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 26.02.2021 அன்று வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும் ஜூலை 2023- க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயனுக்கு கொண்டுவரப்பட இலக்கிடப்பட்டுள்ளது .