திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 759 ஊரக குடியிருப்புகளுக்கான காவேரி ஆற்றினை நீராதாரமாக கொண்டகூட்டுக் குடிநீர் திட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு கவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு ஆணை எண். 201 நாள் 30.11.2020 ல் -ரூ.182.09 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 215063 மற்றும் 240616 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 10.54 மில்லியன் லிட்டர் மற்றும் 11.55 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சிப்பம் -1
ஏற்கனவே உள்ள வேலூர் கூட்டுக் குடிநீர்திட்டத்திற்குரிய தானூந்து குழாயிலிருந்து திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலையில் குடிநீர் எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரின் குடியிருப்புவளாகத்துக்கு பின்புறம் கதிரிமங்கலம ஊராட்சி பகுதியில் 29.30 லட்சம் கொள்ளவு கொண்ட பொது தரைமட்ட நீர் தேக்கதொட்யில் சேகரிக்கப்படுக்கிறது. பின்னர் அம்மன்கோயில், பள்ளத்தூர், பந்தாரப்பள்ளி ஒருங்கினைந்த தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு 40 ஊராட்சியில் அமைக்கப்பட உள்ள ஊராட்சி தரைமட்ட நீர்தேக்கதொட்டி மூலம் 549.268 கிமீ நீளமுள்ள நீர் உந்துகுழாய்கள் மூலமாக ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாககட்டப்படஉள்ள 39 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சிப்பம் - 2
ஏற்கனவே உள்ள வேலூர் கூட்டுக்குடிநீர்திட்டத்திற்குரிய தானூந்து குழாயிலிருந்து பெரியகம்மியம்பட்டு, ரெட்டியூர் கூட்ரோடு குடிநீர் எடுக்கப்பட்டு பெரியகம்மியம்பட்டு பகுதியில் 6.15 லட்சம் கொள்ளவு கொண்ட பொது தரைமட்ட நீர்தேக்க தொட்யில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அம்மயப்பநகர், சின்னமோட்டூர், பெரியமோட்டூர், காவேரிப்பட்டு, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டாகுப்பம், பெத்தக்கல்லுப்பள்ளி, பெரியகம்மியம்பட்டு, நெக்குந்தி, ஆத்தூர்குப்பம் ஒருங்கினைந்த தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு 10 ஊராட்சியில் அமைக்கப்பட உள்ள ஊராட்சி தரைமட்ட நீர்தேக்க தொட்டி மூலம் 115.02 கிமீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலமாக ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாக கட்டப்படஉள்ள 8 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது
இத்திட்டம் இரண்டு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 25.02.2021 ல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 07/2023 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின்பெயர்: | திருப்பத்தூர் மாவட்ட்த்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 759 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் |
நிர்வாக ஒப்புதல் | அரசாணை எண்.201 / RD & PR/ (CGS-1) Dept / dt: 30.11.2020 நாள் 05.03.2018 ரூ. 182.09 கோடி |
திட்ட மதிப்பீடு | ரூ. 182.09 கோடி |
நிதி ஆதாரம் | மத்திய பங்களிப்பு - ரூ 82.09 கோடி மாநிலபங்களிப்பு - ரூ 82.09 கோடி சமூகபங்களிப்பு - ரூ 03.78 கோடி சென்டேஜ் - ரூ 14.13 கோடி |
தொழில்நுட்ப ஒப்புதல் | தொழில்நுட்ப ஒப்புதல், தலைமைப் பொறியாளர், த.கு.வ.வாரியம், வேலூர் எண்.97/2020-21 / நாள் 03.12.2020 /ரூ.144.213 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. |
பணி ஆணை வழங்கப்பட்ட நாள் | 25.02.2021 |
பணி துவங்கப்பட்ட நாள் | 25.02.2021 |
பணி முடிவுறும் நாள் | i) சிப்பம் - I -24.08.2022 ii) சிப்பம்- II- 24.02.2022 |
• ஒப்பந்ததாரர் பெயர் | சிப்பம் - I M/S Keyem Engineering Enterprises, Chennai. சிப்பம் - II M/S Raja & Co, Mettur. |
தற்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கும் குடிநீரின் அளவு | ஊரக குடியிருப்புகள் - 15 லிட்டர் |
இத்திட்டம் நிறைவடையும் பொழுது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கும் | ஊரக குடியிருப்புகள் - 55 லிட்டர் |
• திட்டம் வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவு | நாளொன்றுக்கு i)சிப்பம் - I தொடக்க நிலை ஆண்டு(2022) : 9.29 மில்லியன் லிட்டர் இடை நிலைஆண்டு ( 2037) : 10.54 மில்லியன் லிட்டர் உச்ச நிலை ஆண்டு ( 2052) : 11.55மில்லியன் லிட்டர் ii) சிப்பம் - II தொடக்க நிலை ஆண்டு(2022) : 1.95 மில்லியன் லிட்டர் இடை நிலைஆண்டு ( 2037) : 2.22 மில்லியன் லிட்டர் உச்ச நிலை ஆண்டு ( 2052) : 2.44மில்லியன் லிட்டர் |
பயனாளிகள் | ஊரகக் குடியிருப்புகள் – 759 |
விவரம் | பயன்பெறும் அமைப்புகள் | திட்டம் நிறைவடையும் பொழுது வழங்கப்படும் குடிநீரின் அளவு | |
---|---|---|---|
ஊரகக் குடியிருப்புகள் - 759 எண்ணம் | வடிவமைக்கப் பட்ட குடிநீரின் அளவு (மில்லியன்லிட்டர் நாளொன்றுக்கு ) | வழங்கப்படும் குடிநீரின் அளவு (மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு ) | |
ஊராட்சி ஒன்றியம் - 4எண்ணம் | |||
ஜோலார்பேட்டை ஒன்றியம் (25) | 8.27 | ||
கந்திலி, ஒன்றியம் (12) | 2.69 | ||
திருப்பத்தூர் ஒன்றியம் (4) | 0.71 | ||
நாட்றம்பள்ளி ஒன்றியம் (09) | 2.32 | -- | |
மொத்தம் | 13.99 | - |