Section: Major Water Supply Schemes pages are not under access control

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளிலுள்ள 442 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்

இத்திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசாணை நிலை எண் 201 நாள் 30.11.2020ல் ரூ.412.12 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 282168 மற்றும் 315629 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 18.405 மில்லியன் லிட்டர் மற்றும் 20.502 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், காவிரி ஆற்றில் நஞ்சைகாளமங்கலம் ஊராட்சியில் உள்ள மணத்தம்பாளையத்தில் இயல்பு நீர் எடுக்கப்பட்டு நீர்சேகரிப்பு கிணறுடன் கூடிய நீர் உந்து நிலையத்தில் சேகரிக்கப்பட்டு 3.52 கி.மீ நீளமுள்ள குழாய்கள் மூலம் நீர் உந்தப்பட்டு புஞ்சைகாளமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட உள்ள 18.41 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 116.83 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் 29(ஏற்கனவே உள்ளது 4 மற்றும் புதியது 25) ஊராட்சி தரைமட்ட நீர் தேக்கத்தொட்டிகளில் சேகரிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 26.02.2021 ல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 07/2023க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

திட்டத்தின் பெயர் ஈரோடுமாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில்உள்ள 23 ஊராட்சிகளிலுள்ள 442 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
அறிவிப்பின் விவரம் மாண்மிகு நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைஅமைச்சர் அவர்களால் தமிழக சட்டமன்ற பேரவையில், 2020-21 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கோரிக்கை எண்: 34-ன் கீழ் (அறிவிக்கை எண்: 20) 16.03.2020 அன்று ஆய்விற்கு அறிவிக்கப்பட்ட திட்டம்
நிர்வாக ஒப்புதல் அரசுஆணை எண்.201/ஊரகவளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ் (CGS.1),துறைநாள் 30.11.2020 மூலம் ரூ.412.12கோடி
திட்ட மதிப்பீடு ரூ.412..12 கோடி.
நிதி ஆதாரம் JJM (Central Share) JJM (State Share) JJM (Community Contribution) Other State Funds (Centage) TOTAL 164.87 cr 206.79 cr 5.03 cr 35.43 cr 412.12 cr
தொழில்நுட்ப ஒப்புதல் தலைமைப் பொறியாளர், த.கு.வ வாரியம்.கோவைஅவர்களின் அனுமதி எண்.93/2020-21/நாள்.08.12.2020,ரூ.361.852 கோடி
பணி ஆணை வழங்கப்பட்ட நாள் 26.02.2021
பணி துவங்கப்பட்ட நாள் 26.02.2021
பணி முடிவுறும் நாள் 31.08.2022
ஒப்பந்ததாரர் பெயர் 1. Package 1 & 2 - M/S RPP INFRA PROJECTS LTD, ERODE 2. Package 3 - Thiru R.Velumani, Avinashi
தற்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கும் குடிநீரின் அளவு 25 முதல் 40 லிட்டர்
இத்திட்டம் நிறைவடையும் பொழுது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கும் குடிநீரின் அளவு 55 லிட்டர்
திட்டம் வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவு நாளொன்றுக்கு • தற்போதைய ஆண்டு (202 2 ) : மில்லியன் லிட்டர் • இடை நிலை ஆண்டு(203 7 ) : 18.405 மில்லியன் லிட்டர் • உச்ச நிலை ஆண்டு (205 2 ) : 20.502 மில்லியன் லிட்டர்
பயனாளிகள் ஊரகக் குடியிருப்புகள் - 442 எண்ணம்

திட்ட விவரம்

தலைமையிடம் காவிரி ஆற்றில் நஞ்சைகாளமங்கலம் ஊராட்சியில் உள்ள மணத்தம்பாளையம்
நீராதாரம் காவிரிஆறு
நீரேற்றுக்கிணறுகள் 1 எண்ணம்
நீர்உந்து நிலையம் 4 எண்ணம்
தரைமட்டத்தொட்டிகள் 29 எண்ணம் ( ஏற்கனவே 4 எண்ணம் + புதிதாக 25 எண்ணம்
மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டிகள் 763 எண்ணம் (ஏற்கனவே -554 எண்ணம்புதிதாக -209 எண்ணம்)
நீரேற்றும் குழாய்கள் ( குழாய் அளவு விபரங்கள்) இயல்பு நீர் 3.52 கி.மீ நீளமுள்ள, 711 மி.மீ விட்டம் உள்ள இரும்பு குழாய்கள் மூலம் உந்தப்பட்டு சுத்திரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் 116.83 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் வாயிலாக ஊராட்சி தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியில் சேகரிக்கப்பட்டு 435 .35 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் மேல் நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பகிர்மானக் குழாய்கள் 481.59 கி.மீ
வீட்டிணப்பு 35,236 எண்ணம்
ஆண்டு பராமரிப்பு செலவு ரூ. 793.69 இலட்சம்
1000 லிட்டர் குடிநீருக்கான செலவு ரூ 12.04

 Flow Diagram :

Open

Salient Details

Open