திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் ஆற்றினை நீராதரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.248.59 கோடி மதிப்பீட்டில் அரசாணை எண்.42 நாள் 04.03.2022ல் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட (2052) மக்கள் தொகை முறையே 1,70,125 மற்றும் 1,90,301 ஆகும். மேலும் நாளொன்றுக்குனபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் முறையே 10.17 மற்றும் 11.26 மில்லியன் லிட்டர் ஆகும்.
இத்திட்டத்தில் இலால்குடி ஒன்றியம், இடையாற்றுமங்களம் ஊராட்சி, செவந்திநாதபுரம் அருகில் கொள்ளிடம் ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து அங்கிருந்து நகர் கிராமத்தில் கட்டப்படவுள்ள 5.25 இலட்சம் கொள்ளளவு உள்ள நீர் உந்து நிலையம் மற்றும் தச்சன்குறிச்சி, பம்பரம்சுத்தி, மங்கம்மாள்புரம் ஆகிய இடங்களில் அமைய உள்ள துணை நீர் உந்து நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்பு 43 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிக்களுக்கு 203.40 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 261 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 15 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 188.11 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய் மூலம் நீர் ஏற்றி பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 15,454 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 27.10.2022 அன்று வழங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தின் அனைத்து பணிகளையும் மார்ச் 2024க்குள் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர இலக்கிடப்பட்டுள்ளது.