திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 174 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 174 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்.16/நாள்.26.07.2022ல் ரூ.124.13 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது
இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2038) மக்கள் தொகையின் படி, 1.66 இலட்சம் மக்களுக்கு 9.80 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2053) மக்கள் தொகையின் படி 1.98 இலட்சம் மக்களுக்கு 11.71 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
அமைப்பு -1
காவிரி ஆற்றில் திண்டுக்கரை அருகில் 4 நீர் உறிஞ்சு கிணறுகள் புதிதாக அமைத்து 2.25 இலட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு கிணற்றில் நீர் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து மாத்தூர் நீரூந்து நிலையத்திற்கு நீர் உந்தும் போது வழிதடத்தில் உள்ள 7 தரைமட்ட தொட்டிகளுக்கு (5 புதியது, 2 பயனில் உள்ளது) மற்றும் அறியாவூர் அமையப்படவுள்ள tapping sumpக்கு நீர் ஏற்றப்பட்டுகிறது. பின்னர் மாத்தூர் தரைமட்டதொட்டியிலிருந்து 16 தரைமட்ட தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படுகிறது. இந்த அமைப்பில் பிரதான நீருந்து மற்றும் பிரிவு நீருந்து குழாய்களின் மொத்த நீளம் 87.99 கி.மீ ஆகும். பின்னர் தரைமட்டத் தொட்டியிலிருந்து 161.41 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக புதிதாக கட்டப்படவுள்ள 13 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் மற்றும் ஏற்கெனவே பயனில் உள்ள 214 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்றப்படுகிறது. பின்னர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினரால் 26253 குடிநீர் விட்டிணைப்பு அமைத்து பயனில் உள்ள பகிர்மானக்குழாய்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட உள்ளது..
அமைப்பு -2
காவிரி ஆற்றில் கடியாக்குறிச்சியில் அருகில் 2 ஆழ்துளை கிணறு அமைத்து மற்றும் ஏற்கெனவே பயனில் உள்ள 2 நீர் உறிஞ்சு கிணறுகளிலிருந்து ஏற்கெனவே பயனில் உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் நீர் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து 12.285 கி.மீ நீள்முள்ள நீருந்து குழாய் மூலம் வடுகபுத்தூரில் அமைந்துள்ள தரைமட்ட நீர் சேகரிப்புதொட்டிக்கும் மற்றும் 15.575 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய் மூலம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 குடியிருப்புகளுக்கும் நீர் உந்தப்படுகிறது. பின்னர் வடுகபுத்தூர் தரைமட்ட நீர் சேகரிப்புதொட்டியிலிருந்து 9 தரைமட்ட நீர் சேகரிப்புதொட்டிக்களுக்கு நீர் உந்தப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 75.77 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய் மூலமாக புதிதாக கட்டப்படவுள்ள 4 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் மற்றும் ஏற்கெனவே பயனில் உள்ள 105 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்றப்படுகிறது. பின்னர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினரால் 16,593 குடிநீர் விட்டிணைப்பு அமைத்து பயனில் உள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட உள்ளது.. இத்திட்டத்திற்கான பணி ஆணை 28.01.2023 அன்று வழங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தின் அனைத்து பணிகளையும் ஜூலை 2024க்குள் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர இலக்கிடப்பட்டுள்ளது.