தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர்(பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகள் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கான கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர்த்திட்டம் கூட்டுக்குடிநீர்திட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு(பகுதி), தஞ்சாவூர்(பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகள் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்.16 நாள்.26.07.2022-ல் ரூ.248.67 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால (2039) மற்றும் உச்சகட்ட (2054) மக்கள் தொகை முறையே 2,01,901 மற்றும் 2,25,453 ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஓருவருக்கு 55 லிட்டர் வீதம், மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு 8 இலட்சம் லிட்டரும் இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 15.23 மற்றும் 16.78 மில்லியன் லிட்டர் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு பூதலூர் ஒன்றியம், திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் புதிய நீர் சேகரிப்புக்கிணறு ஒன்றும் மற்றும் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர்உறிஞ்சு கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அகரப்பேட்டை, கடம்பங்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்படவுள்ள முறையே 2.05, 2.70 மற்றும் 4.60 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையங்கள் மற்றும் நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டிலுள்ள 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நீளத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு புதிதாக 55 தரைமட்ட நீர்தேக்கதொட்டிகள் அமைத்து ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 13 தரைமட்ட நீர் தேக்கத்தொட்டிகளுடன் சேர்த்து 68 தரை மட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது. தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலிருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 305 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 23 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் பொது மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 17075 புதிய வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 28.01.2023 அன்று வழங்கப்பட்டு பணிகள் ஆகஸ்ட் 2024 ல் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.