தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்ட
கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அரசு ஆணை எண். 141 /நாள் 11.10.2022 மூலம் ரூ. 288.02 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, ஜல் ஜீவன் மிஷன் நிதியின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது
இத்திட்டத்தின் இடைக்கால (2039) மற்றும் உச்சகட்ட (2054) மக்கள் தொகை முறையே 2,41,890 மற்றும் 2,78,007 ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 13.10 மற்றும் 15.20 மில்லியன் லிட்டர் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு பாபநாசம் ஒன்றியம், சருக்கை ஊராட்சி, புதுக்குடி கிராமத்திற்கு அருகில் புதிய நீர் சேகரிப்பு கிணறு ஒன்று அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படவுள்ள 68 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளுக்கு, 204.32 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் குடிநீர் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளிலிருந்து 344.62 கி.மீ நீருந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 497 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள 38 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலிருந்து, ஏற்கெனவே பயனில் உள்ள பகிர்மான குழாய்கள் மூல மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 18,444 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 10.04.2023 அன்று வழங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தின் அனைத்து பணிகளையும் ஆகஸ்ட் 2024க்குள் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர இலக்கிடப்பட்டுள்ளது.