நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் (இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 523 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மொத்த ஒதுக்கீட்டில் இருந்து)
நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் (இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 523 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.284.04 கோடிக்கு அரசாணை எண்.4(D) எண்.9/நாள்.04.06.2022 மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது
இத்திட்டம், ஜல் ஜீவன் மிஷன் 2021-22 ன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 215114 மற்றும் 240651 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு தற்போதைய , இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 16.39 மில்லியன் லிட்டர் மற்றும் 17.96 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்தின் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 523 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயின் இரண்டு இடங்களிலிருந்து, அதாவது (1) மங்களம் பூஸ்டர் நிலையம் மற்றும் (2) காளிப்பட்டி – (இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின்) மல்லசமுத்திரம் தரைமட்ட நீர் தேக்கத்தொட்டி அருகில் நீர் எடுக்கப்பட்டு 64.53 கி.மீ நீள பூஸ்டர் மெயின் மூலமாக 9 எண்கள் பூஸ்டர் நிலையங்களுக்கு நீர் உந்தப்படுகிறது.(4 எண்கள் புதியது, 5 எண்கள் ஏற்கனவே உள்ளவை). இப்பூஸ்டர் நிலையங்களிலிருந்து 214.465 கி.மீ நீளத்திற்க்கு, நீரூட்டு குழாய்கள் மூலமாக அனைத்து ஊராட்சி தரை மட்ட தொட்டிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊராட்சி தரைமட்ட தொட்டிகளிலிருந்து 633.215 கி.மீ நீளமுள்ள நீரூட்டு குழாய்கள்) மூலமாக புதியதாக கட்டப்படவுள்ள 52 தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் 77 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலமாக 639.11 கி.மீ நீளம் கொண்ட பகிர்மான குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதில் 22582 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 02.12.2022 அன்று வழங்கபப்பட்டுபணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. இத்திட்டம் 06/2024க்குள். முடித்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட உள்ளது.