ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளிலுள்ள 434 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்திலுள்ள 22 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த 434 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் அரசாணை எண் 142, நநி(ம)குவ (குவ.1) துறை/நாள்.11.10.2022ல் ரூ.437 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டம், ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் இடைக்கால (2039) மற்றும் உச்சகட்ட(2054) மக்கள் தொகை முறையே 186540 மற்றும் 226600 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 15.04 மில்லியன் லிட்டர் மற்றும் 17.74 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு காவிரி ஆற்றினை நீராதராமாகக் கொண்டு மொடக்குறிச்சி ஒன்றியத்தின் முத்துகவுண்டம்பாளையம் ஊராட்சி ஸ்ரீ பெரிய சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் அருகில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது , அங்கிருந்து 9.06கி.மீ தொலைவில் எல்லைநகர் அருகில் நீருந்து நிலையம் அமைத்து, பின்னர் அங்கிருந்து 12.64கி.மீ தொலைவில் சென்னிமலை ஒன்றியத்தின் குமாரவலசு ஊராட்சி வெள்ளமுத்துக்கவுண்டன்வலசில் 12.11 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செயல்பட உள்ளது. பின்னர் 42 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து, 618.39 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் 266 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 28640 வீட்டிணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 06.03.2023 அன்று வழங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளது. இத்திட்டம் 09/2024க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.