நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம்நகராட்சி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள், இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 424 ஊரககுடியிருப்புகள் மற்றும் புதுசத்திரம் ஒன்றித்தில் உள்ள 99 ஊரக குடியிருப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் & பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 குடியிருப்புகளுக்கு மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக்குடிநீர்திட்டம்
இத்திட்டத்திற்கான நிர்வாக அரசாணை எண்.44. நாள்.14.03.2022-ல் ரூ.854.37 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராம பகுதிகளுக்கு ஜல் ஜீவன் மிஷன் மூலம் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு அம்ருத் 2.0 நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால (2037) மற்றும் உச்சகட்ட(2052) மக்கள் தொகை முறையே 5,13,606 மற்றும் 5,83,011 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 76.14 மில்லியன் லிட்டர் மற்றும் 86.04 மில்லியன் லிட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் கரையில் குதிரைக்கல்மேடு கதவணைக்கும், நெருஞ்சிப்பேட்டை கதவணைக்கும் இடைப்பட்டபகுதியில் நெடுங்குளம் காட்டூர் என்னுமிடத்தில் அமைக்கப்படவுள்ள நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணற்றின் மூலம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து இயல்புநீர் 2.30கி.மீ தூரத்திற்கு குழாய்கள் மூலம் கரட்டுபுதூர் என்னுமிடத்தில் அமைய உள்ள 76.14 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புதிறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 43.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது, அங்கிருந்து 1325.29கி.மீ நீளமுள்ள நீருந்து உந்து ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள பிரதான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது , பின்னர் ஊராட்சி தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளிலிருந்து --கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் ஊராட்சிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர் --- கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 08.04.23 அன்று வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் 7 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இதர பணிகள் முனேற்றத்தில் உள்ளது. இத்திட்டம் 10/2024க்குள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.