Section: Major Water Supply Schemes pages are not under access control

மதுரைமாவட்டம், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 88 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு மேலூர்கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி கூடுதலாக குடிநீர் வழங்கும்திட்டம்

மதுரைமாவட்டம், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 88 ஊரககுடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு மேலூர் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி கூடுதலாக குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசுஆணை நிலைஎண்.(4D) No.16 ந.நி. மற்றும்கு.வ.துறை (கு.வ.1) நாள். 26.07.2022-ல் ரூ.127.18 கோடிக்குவழங்கப்பட்டது. இத் திட்டம் ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது

இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மேலூர் ஒன்றியத்தைச் சார்ந்த 47 குடியிருப்புகள் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்த 41 குடியிருப்புகள் ஆகமொத்தம் 88 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இத்திட்டம் இடைக்காலமக்கள் தொகை (2037) 1.63 இலட்சம் மக்களுக்கு 4.97 மில்லியன் லிட்டர், உச்சகாலம் (2052) மக்கள்தொகை 1.78 இலட்சம் மக்களுக்கு 6.46 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊரககுடியிருப்புகளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு 4 நீர் உறிஞ்சுகிணறுகள் அமைக்கப்பட்டு ,அக்கிணறுகளிலிருந்து பெறப்படும் குடிநீர் தற்போது உள்ள 36.55 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து தற்போதுள்ள 1100 மி.மீ விட்டமுள்ள பிரதானகுழாய் மூலம் தற்போதுள்ள கோட்டையூர் நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.

கோட்டையூர் நீர்சேகரிப்புத் தொட்டியில் சேகரிக்கும் குடிநீர் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 21 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 154.84 கி.மீ. நீளமுள்ள நீருந்து மற்றும் தன்னோட்டக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தற்போதுள்ள 55 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள 29 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்படவுள்ளது. பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப் படவுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இதுபோன்று புலிப்பட்டி மற்றும் மேலூர் காந்திபூங்காவில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட26 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 168.14 கி.மீ. நீளமுள்ள நீர் உந்துக்குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு தற்போதுள்ள 108 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாககட்டப்படவுள்ள 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்படவுள்ளது. பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள பகிர்மானகுழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது

இத்திட்டத்தின் மூலம் 30,009 வீட்டுஇணைப்புகள் வழங்கப்படவுள்ளது

இத்திட்டத்திற்கானபணிஉத்தரவு 24.03.2023 அன்று வழங்கப்பட்டு 09/2024 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 Flow Diagram :

Open

Salient Details

Open